Cabinet approves Archives - Oruvan.com

நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல் நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

,தற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள கீழ்வரும் முகவரிகளில் அமைந்துள்ள கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 07

இலக்கம் C 76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07

இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 07

இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07

உயர் நீதிமன்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய வீடு என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் appeared first on Oruvan.com.

30 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு – அமைச்சரவை அனுமதி
பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தின் கீழ் 18,853 புதிய ஆட்சேர்ப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக, பல்வேறு பொது சேவை நிறுவனங்களின் பணியாளர் நிலைகளை மதிப்பாய்வு செய்து, தேவையான ஆட்சேர்ப்புகளைச் செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்திலிருந்து இதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் விண்ணப்பங்களை கோருவதற்கும், பரிந்துரைக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு இணங்க ஆட்சேர்ப்பை மேற்கொள்வதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

The post 30 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு – அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்
அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான “வளமான நாடு – அழகிய வாழ்வு” கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தில்,

“வளமான நாடு- அழகிய வாழ்வு” என்ற கொள்கை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, இது வலுவான உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டு நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 முக்கிய பகுதிகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது:

இந்த 4 முக்கிய பகுதிகளின் கீழ் 40 துணைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் இவை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களால் “வளமான நாடு- அழகிய வாழ்வு” கொள்கை அறிக்கையை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் appeared first on Oruvan.com.