Budget Archives - Oruvan.com

வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026  ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

மாலை  6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம்  ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

இதன்படி, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம்  எட்டாம் திகதி ஆரம்பமானது.

14 ஆம் திகதிவரை விவாதம் நடைபெற்றது.  14 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததுடன் எட்டு பேர் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்திருந்தனர்.

அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமானது.

இதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று appeared first on Oruvan.com.

வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல்
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

உண்மையிலேயே ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன.

அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.

ஒருவேளை, எதாவது துறைசார் நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் போது எமது பிரதேசம் புறக்கணிக்கப்படுமாயின் அதுதொடர்பாக எமது ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.

மாறாக, எமது பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சிறு பகுதியே எமது மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவதும் அபத்தமானது.

கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவி்த்துள்ளார்.

The post வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல் appeared first on Oruvan.com.

இருண்ட இந்தோனேசியா – நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பின்னர், முக்கிய நகரமான யோககர்த்தாவில் சுமார் ஆயிரம் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் கருப்பு உடையில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுமத்ரா தீவில் உள்ள மேடன் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள்  இம்பெற்றன.

ஜனாதிபதியின் இந்த கொள்கைகள் சமூக ஆதரவு அமைப்புகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

செலவுக் குறைப்பு நடவடிக்கை மக்கள் சார்புடையவை அல்ல என தெரிவித்து இருண்ட இந்தோனேசியா எனும் தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post இருண்ட இந்தோனேசியா –  நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம் appeared first on Oruvan.com.

புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்காக நாடாளுமன்றம் இன்று (17) காலை 10:30 மணிக்கு கூடும்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஜனாதிபதி திசாநாயக்கவும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எதிர்வரும் ஆண்டிற்கான முக்கிய நிதி முன்னுரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ‘X’ தளப் பதிவில், ஜனாதிபதி திசாநாயக்க “முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை இயக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்திற்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான தயாரிப்பாக, வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் இறுதி கட்டங்கள் குறித்த முதற்கட்ட விவாதம் சமீபத்தில் ஜனாதிபதி திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்த விவாதம் பிப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்றது, இதில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி ஒன்பதாம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டு மசோதாவை சமர்ப்பித்தார்.

ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) இன்று (17) நடைபெறும், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறும். மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

வரவுச் செலவு விவாதக் காலத்தில், காலை 9:30 மணி முதல் காலை 10:00 மணி வரை வாய்மொழி பதில்களுக்கான ஐந்து கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அதே நேரத்தில் விவாதம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

கூடுதலாக, பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆகிய திகதிகளில் வாக்கெடுப்பு நடைபெறும் நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒத்திவைப்பு நேரப் பிரேரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது appeared first on Oruvan.com.

தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு
பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கனவு என்றும் அரலகங்வில மகாவலி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று கூறிய பிரதமர், தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மக்களால் பாதுகாக்கப்படும் அரசாங்கம் என்றும் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எங்கள் அரசுக்கு இருப்பதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு தரவு அடிப்படையிலான மாற்றங்களைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறிய பிரதமர், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார்.

மேலும், முந்தைய அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான வேலைத்திட்டம் உள்ளடக்கப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பது, ஆசிரியர் பயிற்சி வழங்குவது மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன கல்வி அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில்முறைத் திறனை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

The post தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்.

இதன்படி, பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரை

மாத்திரமே அழைத்து வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு எந்தவொரு விருந்தினர்களையும் அழைத்து வரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற அரங்கம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு appeared first on Oruvan.com.

தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரிவான கொள்கையை வகுப்பதில் செயற்பட்டு வருகிறது.

இந்தத் துறையை ஆதரிப்பதற்காக ஏற்கனவே பல குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னை சாகுபடியை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளூர் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றன.

பயனுள்ள விவசாய நடைமுறைகளை அடையாளம் காணல், நோய்கள் மற்றும் பூச்சிகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தென்னை துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை பரிந்துரைகளை சமர்ப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.

The post தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர் appeared first on Oruvan.com.

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்தார்.

இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்
ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

“கடந்த 76 ஆண்டுகளாக, இலங்கை ஊழல், மோசடி மற்றும் திறமையின்மையின் கீழ் இயங்கி, நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சரியான திசையில் இட்டுச் செல்வதைத் தடுத்தது.

இதனால், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், மீண்டெழுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். 5 வீத பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறையில் சுமார் 10 வீத வளர்ச்சியையும் எட்டுவது சாதகமான நிலை.

பணவீக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதும், வணிகச் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்” என்றார்.

The post அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம் appeared first on Oruvan.com.