Bondi Beach Archives - Oruvan.com

போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல
அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் தனியாகச் செயல்பட்டதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.

சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமான இந்தத் தாக்குதலை, பயங்கரவாதச் சம்பவம் என்று காவல்துறை அறிவித்திருந்தது.

தந்தை மற்றும் மகன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இதில் பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தாக்குதலுக்கு முன்னர் குறித்த இருவரும் பிலிப்பைன்ஸுக்கு பயணம் செய்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நவம்பர் முதலாம் திகதி பிலிப்பைன்ஸ் சென்ற அவர்கள் நவம்பர் 29ஆம் திகதி சிட்னி திரும்பியுள்ளனர்.

அவர்கள் பிலிப்பைன்ஸில் தங்கியிருந்த காலப்பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சிகள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் துப்பாக்கிதாரிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சிசிடிவி காட்சிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தகவல்களை மதிப்பாய்வு செய்து வருவதாக கிறிஸ்ஸி பாரெட்  தெரிவித்துள்ளார்.

ஆரம்ப மதிப்பீடுகளில் குறித்த நபர்கள் தனியாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் ​​புதிய சான்றுகள் அல்லது தகவல்கள் வெளிவரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல appeared first on Oruvan.com.

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு
சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் அறிவித்திருந்தனர். 50 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

24 வயதான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தாக்குதலின் போது அவரது தந்தை சஜித் கொல்லப்பட்டார். இந்நிலையில், நாட்டின் தேசிய அமைச்சரவை துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியான ஊடகங்களிடம் இன்று பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் தற்போது, நான்கு  மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது போர்ட் ஆர்தர் படுகொலை நடந்த நேரத்தில் இருந்ததை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய  மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன.

இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் (Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு
சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி நவீத் அக்ரம்  பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும்  இரண்டு இஸ்லாமிய அரசு கொடிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட தந்தையும் மகனும் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் பயணம் செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் ஏன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர்  கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

போண்டி கடற்கரையில் ஹனுக்காவைக் கொண்டாடிய யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இதில் 50 வயதான தந்தை பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும், 24 வயதான நவீத் அக்ரம்  கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த தாக்குதலில் 42 பேர் காயணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு appeared first on Oruvan.com.

கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும், அதில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களும் அடங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களால் உரிமம் பெறக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் வரம்புகள், அதிக சோதனைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரிமங்களை மறுஆய்வு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்

“மக்களின் சூழ்நிலைகள் மாறுகின்றன, மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீவிரமயமாக்கப்படலாம், உரிமங்கள் நிரந்தரமாக வழங்கப்படக்கூடாது,” என்று  பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை 50 வயதான தந்தையும், 24 வயதான மகனும் மேற்கொண்டிருந்தனர். இதில் 50 வயதான தந்தை  உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார்  பயங்கரவாதச் செயலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

கடற்கரையில் இருந்தவர்களை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் இரண்டு பொலிஸ“ அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை appeared first on Oruvan.com.

சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று (14) நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பல்வேறு தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய 50 வயதுடைய தந்தை கொல்லப்பட்டதாகவும், அவரது மகன் 24 வயது இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அவர்களை குறிவைத்து பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்நேரத்தில் தாக்குதல்தாரி ஒருவரை பொது மகன் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பிடித்திருந்தார். பின்னர், உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் நேற்று (14) மதியம் துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாதச் செயலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவுஸ்திரேலிய பிரதமரும் இது ஒரு யூத எதிர்ப்புச் செயல் என்று தெரிவித்துள்ளார்.

The post சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Oruvan.com.