body Archives - Oruvan.com

கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. சடலம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

The post கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு
கண்டி, தென்னகும்புர பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன 02 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மகாவலி கங்கையின் குருதெணிய பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று(10) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

காணாமற்போன 13 வயதான மற்றைய மாணவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த 02 மாணவர்களும் நேற்று(08) முன்தினம் காணாமல் போயிருந்தனர்.

மகாவலி கங்கையில் இருவரும் இறங்கியதை கண்டதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றின் உடல் காணாமற் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலொன்றின்

கழிப்பறையிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதவானின்

உத்தரவின் பேரில், குழந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டது.

கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை பொலிஸ்நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறைக்குச் சென்று,விசாரணை மேற்கொண்ட போது, குறித்த குழந்தையின் உடல் காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல் appeared first on Oruvan.com.

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

The post முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவு காரணமாக தனது 77 ஆவது வயதில் அவர் இன்று சனிக்கிழமை காலமானார்.

மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது.

மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

The post கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் appeared first on Oruvan.com.

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு
ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள்

காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில்

அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய அஸ்கிரிய கம்பஹா பகுதியை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று பொழுதுப் போக்குக்காக ஸ்னோர்கெல் என்னும் நீரினுள் சுவாசிக்க உதவும் கருவியை அணிந்து கடலின் உற்பகுதியை பார்வையிட்ட போதே, குறித்த மாணவர் காணாமல் போயுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் அம்மாணவர் அணிந்திருந்த ஸ்னோர்கெல் கருவி உயிர் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,

கொழும்பு துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

கொச்சிக்கடையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post கொச்சிக்கடையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
அவுஸ்திரேலியாவில் எல்ஃபிரட் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிசுக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காரணமாக வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை நாளை முதல் கட்டம் கட்டமாக திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அனர்த்த நிலைமைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச

ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு appeared first on Oruvan.com.