BJP Tamil Nadu president Archives - Oruvan.com

மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை
வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.

இந்நிலையிலேயே அவர் இன்று தமிழகம் வந்துள்ளார்.

காலை 10 மணிக்கு சென்னை வந்த அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், பிற்பகல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்துக்கு சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பழனிசாமியை, பியூஷ் கோயல் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பியூஷ் கோயல் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம்  அவர் டில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை appeared first on Oruvan.com.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மோடி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13ஆம் திகதி தமிழகம் வரும் பிரதமர் 15ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் யாத்திரை நிறைவு விழா ஆகியவற்றிலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் தமிழக பயணத்துக்கான ஏற்பாடுகளில்  பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம் appeared first on Oruvan.com.

தமிழகம் மொழிப் போருக்கு தயாராக இருக்கின்றது – முதலமைச்சர் ஸ்டாலின்
தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு “மற்றொரு மொழிப் போருக்கு” தயாராக இருப்பதாக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டில் “ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக” திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சர்ச்சை வெடித்துள்ளது. இரு மொழி சூத்திரம் மட்டுமே மாநிலத்தில் இருக்கும் என்று திமுக தரப்பினர்கள் கூறி வருகின்றனர்.

ஹிந்தியை திணிக்கும் முயற்சிகள் மூலம் மத்திய அரசு “மற்றொரு மொழிப் போருக்கு விதைகளை விதைக்கிறதா” என்று கேட்டதற்கு, “ஆம், நிச்சயமாக. நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

குறிப்பாக, மொழிப் பிரச்சினை திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

“ஹிந்தி திணிப்புக்கு” எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டாலும், எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்று திமுக பலமுறை கூறி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, திமுகவிற்கு எதிராக தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியை செயல்படுத்துவதில் அவர்களின் “பாசாங்குத்தனத்தை” குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்ற தனது கூற்றை முரண்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

The post தமிழகம் மொழிப் போருக்கு தயாராக இருக்கின்றது – முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Oruvan.com.

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

தனது வீட்டிற்கு வெளியே பலருக்கு முன்னால் அவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவியின் துயரமான பாலியல் வன்கொடுமை நீதிகோரி தனது வீட்டிற்கு முன் இன்று (27 ஆம் திகதி) காலை 10 மணிக்கு ஆறு முறை சவுக்கால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஒரு தமிழக ஆளும் கட்சியான திமுக நிர்வாகி என்றும், அதை ஆளும் கட்சி மறுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படங்களைக் காட்டி, அவர் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகி என்றும் குற்றம் சாட்டினார்.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவின் முதன்மை உறுப்பினர் கூட இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வலியுறுத்தினார்.

ஆளும் கட்சியுடன் தொடர்புடையதால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.

“இது மிகவும் எளிமையானது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவுடன் தொடர்புடையவர் என்பதால், பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

முதல் தகவல் அறிக்கை (FIR) எழுதப்பட்ட விதம் குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார், மேலும் பாதிக்கப்பட்டவர் ஒரு குற்றம் செய்தது போல் அது வரைவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு திமுக (அரசு) வெட்கப்பட வேண்டும்” என்று தமிழக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி டிசம்பர் 23 அன்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

கல்லூரி வளாகத்தில் ஒரு ஆண் நண்பருடன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து 37 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“விசாரணையின் போது, ​​ஆதாரங்களின் அடிப்படையில், கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வியாபாரம் செய்கிறார்” என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவர் வேறு குற்றங்களில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை appeared first on Oruvan.com.