Bill Archives - Oruvan.com

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் – உயர் நீதிமன்றின் தீர்மானம்
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.

இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

The post ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து  சட்டமூலம் – உயர் நீதிமன்றின் தீர்மானம் appeared first on Oruvan.com.

மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார்

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை பேரவைக்கு பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கு இதன் ஏற்பாடுகள் இடமளிக்கும்.

மொத்த விற்பனை மின்சாரச் சந்தை என்பது தேசிய மின்சாரச் சந்தை என மாற்றப்படுவதுடன் வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுதல், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

The post மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர் appeared first on Oruvan.com.

சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகார பகிர்வு, இறையாண்மை மற்றும் மக்களின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் விதிகள், ஒட்டுமொத்தமாக, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 1, 3, 4 மற்றும் 12(1) பிரிவுகளை மீறுவதாகவும் உள்ளதென மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, சட்டமூலத்தின் தொடர்புடைய விதிகளை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும், சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவும் முன்னதாக குறித்த சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள் appeared first on Oruvan.com.

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் விளம்பரச் செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது இந்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தரவிடப்பட்டது.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிவதாக இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் சேவையை நிறுத்துவது தொடர்பான தெளிவான உத்தரவு சட்டமூலத்தில் இல்லை என்றும் மனுக்கள் கூறுகின்றன.

தொடர்புடைய சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

The post மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் –  இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு appeared first on Oruvan.com.