Benjamin Netanyahu Archives - Oruvan.com

ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது அமெரிக்காவின் வெற்றி எனவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க செய்துள்ளனர் எனவும் கரோலின் லீவிட் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக “ஒபரேஷன் எபிக் ஃபியூரி” என்பது நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கும் ஒரு நடவடிக்கை என்று ஜனாதிபதி தொடக்கத்திலிருந்தே கூறிவந்ததாக கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா 38 நாட்களில் தனது முக்கிய இராணுவ இலக்குகளை அடைந்து, அவற்றை விஞ்சியும் செயல்பட்டது” என்றும் கரோலின் லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி போர் தொடுத்திருந்தது.

இதனையடுத்து முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஈரானின் இந்த நடவடிக்கையினால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அத்துடன், இஸ்ரேலையும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளையும் குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்பொல்லா அமைப்பினரும் போரில் களம் இறங்கியிருந்தனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக முன்னெடுக்கப்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் உலக நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தன.

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்த நிலையில், பல நாடுகளில் கடும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீள திறக்க வேண்டும் எனவும், அணு சக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அவ்வாறு இல்லையெனில் ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவேன் எனவும், ஈரான் ஒரு போதும் மீண்டு வாராது எனவும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலையுடன் ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த காலகெடு முடிவடைந்திருந்த நிலையில், ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் நிலவியிருந்தது.

அத்துடன், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் பொது மக்கள் நேற்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

ஈரான் முழுவதும் உள்ள முக்கிய பாலங்கள் மற்றும் மின் நிலையங்களில் மக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போர்க் குற்றவாளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்குத் தாங்கள் அஞ்சவில்லை என்றும், அதனால் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான இடங்களுக்கு வந்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இரண்டு வார கால போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் மீதான பேரழிவுத் தாக்குதலை இன்று இரவு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாடு’ என்பதற்கு மாற்றாக ‘ஈரானிய இஸ்லாமியக் குடியரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதாகவும், இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக அமையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இராணுவ இலக்குகளையும் நாம் அடைந்து, அவற்றை விடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதோடு, மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்கும் ஈரானுடனான நீண்டகால அமைதி குறித்த தெளிவான உடன்படிக்கையை நோக்கி வெகுதூரம் முன்னேறியுள்ளோம் என்பதே இந்த முடிவிற்கான காரணம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டிள்ளார்.

ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு தமக்குக் கிடைத்ததாகவும், அதனைப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியமான அடிப்படையாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்திலும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து முடிக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையிலும், மத்திய கிழக்கு நாடுகளின் சார்பாகவும், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது தனக்கு பெருமையாகும் என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டிருந்த நிலையில், ஈரானிய அரச தொலைக்காட்சி அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை வெற்றியாகக் காட்டி அறிவித்துள்ளது.

அந்த ஒளிபரப்பில், ஆக்கிரமிப்பு செய்யாமை, தடைகளை நீக்குதல் மற்றும் அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது குதாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளிலும் இணையும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானுக்குப் பொருந்தாது என்றும், லெபனான் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வல்லரசு நாடுகளும், பல அண்டை நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

குறிப்பாக, மேற்குக் கரையில் இஸ்ரேல் மீண்டும் நிலப் பதிவுகளை ஆரம்பித்துள்ளமையானது, பாலஸ்தீன நிலங்களை உத்தியோகபூர்வமாகத் தன்னுடன் இணைக்கும் முயற்சி எனப் பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் கண்டன அறிக்கையில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இருப்பினும், ஐநாவுக்கான பாலஸ்தீனத் தூதரகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் இடம்பெறவில்லை.

சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராகப் பெரும் கண்டன அலை எழுந்துள்ள போதிலும், இலங்கை இந்தப் பட்டியலில் இணையாமல் தவிர்ந்துள்ளமை அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்! appeared first on Oruvan.com.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரம், பெய்ட் லாஹியா, அல்-புரைஜ், நுசைரத் மற்றும் கான் யூனிஸ் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகள் இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும்,  இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் “எந்தத் தொடர்பும்” இல்லை என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, “தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும்  மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக” காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளனர் எனவும், இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பலமான தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் உத்தரவிற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை.

எவ்வாறாயினும், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் ஹமாஸ் “எச்சரிக்கை எல்லையை” கடந்து விட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை
காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நாளை (06) எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன, மேலும் காசா அமைதித் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய குழு எகிப்துக்குச் சென்றுள்ளது.

இதற்கிடையில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட போதிலும், ஹமாஸ் நிராயுதபாணியாக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

20 அம்ச ஒப்பந்தம், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 20 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக நம்பப்படும்வர்களின் உடல்களையும், நூற்றுக்கணக்கான காசாவாசிகளையும் பிணைக் கைதிகளாக விடுவிப்பதற்கும் முன்மொழிகிறமை குறிப்பிடத்தக்கது.

The post பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை appeared first on Oruvan.com.

காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார்.

20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எட்டியுள்ளார்.

அதன்படி, புதிய அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் உடன்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி, ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இஸ்ரேல் எடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

காசா பகுதிக்கான அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்த புதிய அமைதித் திட்டத்தில் காசா பகுதியில் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல் உள்ளிட்ட 20 அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு appeared first on Oruvan.com.

காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு காசாவை முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பதற்கான தனது விருப்பத்தை தெளிவுபடுத்திய பின்னர் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த அனுமதி இஸ்ரேலின் உயர்மட்ட ஜெனரலின் தயக்கங்களை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள 20 அல்லது அதற்கு மேற்பட்ட உயிருள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும், சுமார் இரண்டு ஆண்டுகால பிராந்தியப் போர்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவத்தை மேலும் கஷ்டப்படுத்தும் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இல்லாத காசா பிரதேசத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதிகளையோ கைப்பற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சரவை விவாதிக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.

முறையான முடிவு வரும் வரை பெயர் வெளியிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி, ஹமாஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

கூட்டத்திற்கு முன்னதாக ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் “முழு காசாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமா” என்று கேட்டதற்கு,”எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹமாஸை அங்கிருந்து அகற்றி, மக்கள் காசாவிலிருந்து விடுபட உதவும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று நெதன்யாகு கூறினார்: ”

இதேவேளை, இஸ்ரேல் ஏற்கனவே காசாவின் 75% பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது மற்றும் அதன் எல்லைகளை பெருமளவில் மூடிவிட்டுள்ளது.

முழு கட்டுப்பாட்டையும் எடுக்க, மீதமுள்ள பகுதிகளில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘பணயக்கைதிகளையும் வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும்’

காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டம், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) உயர் அதிகாரி உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

The post காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Oruvan.com.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

“இறுதியில், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான். பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன் பாதுகாப்பான இஸ்ரேல் எங்கள் இலக்கு.

உண்மையான அமைதிக்கான பங்களிப்பாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது இரு நாடுகள் தீர்வுக்காக செயல்பட வேண்டிய நேரம் இது,” என்று கெய்ர் ஸ்டார்மர் மேலும் கூறினார்.

சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் முன்னர் கூறியிருந்தது. செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் அறிவித்தார்.

காசாவில் போர் தொடங்கி 662 நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேல் காசாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இறப்பு எண்ணிக்கை 60,034 ஐ எட்டியுள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 36 பேர் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, 88 குழந்தைகள் உட்பட 147 பேர் மரணமடைந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையைச் செய்து வருகிறது, இது உலகின் மனசாட்சியை நெரிக்கிறது.

நேற்று உணவுக்காக வரிசையில் காத்திருந்த 19 பேர் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். 637 பேர் காயமடைந்தனர்.

ரஃபாவில் உள்ள ஒரு உணவு மையத்தில் காத்திருந்த மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர், மேலும் அகதிகள் வசிக்கும் அல்மாவாசியில் உள்ள ஒரு முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

காசாவில் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பசி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

The post பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா appeared first on Oruvan.com.

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை வெளியிட்டார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நெதன்யாகு நியாயப்படுத்தினார், மேலும் கமேனியை ‘நவீன கால ஹிட்லர்’ என்று அழைத்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்ததாக வெளியான செய்திகளை நெதன்யாகு மறுத்தார். “இது (காமெனியின் படுகொலை) மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக” என்று நெதன்யாகு கூறினார்.

நெதன்யாகுவின் வாதம் என்னவென்றால், ஈரான் இஸ்ரேலைப் போருக்குத் தள்ளுகிறது. ஈரான் எப்போதும் போரை விரும்புகிறது. அது நம்மை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.

இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. தீய சக்திகளை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நினைத்து உலகம் கவலை கொண்டுள்ளது. நேற்று, தொடர்ந்து நான்காவது இரவும் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள மாவட்டம் 3 உட்பட பல இடங்களில் இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தியது. ஈரானின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.

பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஸ்டேட் டிவியில் நேரடி செய்தி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.

ஒரு பெரிய வெடிப்பு மற்றும் ஒரு செய்தி தொகுப்பாளர் வெளியேறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேபோன்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் விடுத்த ஈரான், டெல் அவிவ் மக்கள் விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.

The post அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் appeared first on Oruvan.com.

காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, அந்தப் பகுதி அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஈரான் அணுசக்தி நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் நெதன்யாகு மேலும் கூறினார்.

இதற்கிடையில், பணயக்கைதிகளை திருப்பி அனுப்பத் தவறியதால் நெதன்யாகு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

பிணைக் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்து மட்டுமல்ல, அவரது சொந்த ஆதரவாளர்களிடமிருந்தும் நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 90 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக அறிவித்தது. நேற்று இரவு, இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

கான் யூனிஸில் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ரஃபாவில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு appeared first on Oruvan.com.

டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் நீக்குவதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய நிதியமைச்சர் நிர் பரகாத்தும் கையெழுத்திட்டால், அமெரிக்கப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளும் நீக்கப்படும்.

அமெரிக்கா இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி நாடாகும். 2024 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் 34 பில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்தது.

சந்தையை மேலும் திறப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கட்டணக் குறைப்பு இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் உதவும் என்று நம்புவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தவும், பொருளாதார ஆதாயங்களை அதிகரிக்கவும் உதவும் என்று நம்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்படி, இஸ்ரேல் அமெரிக்கப் பொருட்களில் 98 சதவீதத்திற்கு வரிகளை விதிக்கவில்லை. இஸ்ரேல் தற்போது முக்கியமாக அமெரிக்காவிலிருந்து வரும் விவசாயப் பொருட்களுக்கு வரிகளை விதிக்கிறது.

The post டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது appeared first on Oruvan.com.