Batticaloa News Archives - Oruvan.com

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்ச்சிப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’ மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு”, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?”, “ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்

இந்தப் போராட்டத்தின் போது, அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என ஊடக அமைப்புகள் இதன்போது உறுதிபடத் தெரிவித்தன.

The post மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி appeared first on Oruvan.com.

தாழங்குடாவில் மர்மமான முறையில் தோண்டப்பட்ட குழி – விசேட அதிரடிப்படையினர் சோதனை
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஷஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து சோதனை செய்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் ஷஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து சோதனை செய்துள்ளனர்.

இந்த நோதனை நடைபெற்ற காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த நான்காம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு, ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவதுபொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாழங்குடாவில் மர்மமான முறையில் தோண்டப்பட்ட குழி – விசேட அதிரடிப்படையினர் சோதனை appeared first on Oruvan.com.

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மனித புதைகுழியென நம்பப்படும்  பிரதேசத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, 2.8 மில்லியன் ரூபாய் கோரிக்கையை நிதி அமைச்சு மற்றும் நீதி அமைச்சிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்ய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

குறித்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அகழ்வாய்வுப் பணிகளுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதை மேல் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சடடத்தரணி முசாம் முபாரக் இதனை தெரிவித்துள்ளார்.

“இன்று கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு குறித்து இன்று அவதானம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய 2.85 மில்லியன் ரூபாய் பாதீட்டின் பட்ஜட் பிரேக்டவுன் (budget breakdown) இன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இந்த பாதீட்டு நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக நிதி அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையிட்டுள்ளார்.”

இந்த வழக்கு ஒக்டோபர் ஒன்பதாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

The post குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு! appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு 15 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் நான்காம் திகதி நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நிதி நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு ஐந்து லட்சம் ரூபா வீதம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் பாடசாலை காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில், ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏறாவூர் நீதிமன்ற உத்தரவை பெற்று, பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று(09) செவ்வாய்க்கிழமை காலை சோதனை செய்தனர்.

இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post மட்டக்களப்பில் பாடசாலை காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு appeared first on Oruvan.com.

கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட 150 பேருக்கு சர்வதேச நீதிக்கான கோரிக்கை!
மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்தபோது இலங்கை அரசாங்கப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 150ற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது எனக் கூறும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மதத் தலைவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேச தலையீட்டைக் கோருகின்றனர்.

“இது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட கிழக்கு மாகாண இன அழிப்பே இது. வீதியில் நிற்கின்றோம். நீதி தேவதைக்கு கண் இல்லை, அதுபோலத்தான் இந்த விவகாரமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த 35 வருடங்களாக உள்ளக பொறிமுறை அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறாத நீதி இனியும் கிடைக்காது. ஆகவேதான் நாங்கள் சர்வதேச நீதிபொறிமுறை ஊடாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.”

35 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி செப்டெம்பர் 5, 2025ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் நினைவேந்தலில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலராஜ் அமலநாயகி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்க கிடைத்த சுமார் 17,000 முறைப்பாடுகளில் மீதமுள்ள 10,000 முறைப்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பதற்கான ஒரு முன்மொழிவை அமைச்சரவை இந்த வாரம் அங்கீகரித்தது.

“அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”

மூன்றரை தசாப்தங்களாக தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடி வரும் ஒரு தாயின் கதியை, அமல்ராஜ் அமலநாயகி பிரதேச ஊடகவியலாளர்களுக்கு பின்வருமாறு விளக்கினார்:

“போன வருடம் நினைவேந்தலுக்கு வந்த அம்மாவால் இந்த வருடம் நினைவேந்தலுக்கு வரமுடியாமல் படுக்கையில் இருக்கின்றார். தன்னுடைய மகனுக்காக கண்ணீர் வடித்த கண்ணீர் வடித்து படுக்கையில் கிடக்கின்றார். தன்னுடைய மகனுக்கு நீதி கேட் முடியாத நிலைமையில் அந்த தாய் இருக்கின்றார்.”

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறூமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்கள் கொம்மாதுறை இராணுவ முகாமில் இருந்து வந்தவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேடுதல் மற்றும் அழிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வாழைச்சேனை இராணுவ முகாமின் துருப்புக்கள் தாக்குதல் நடத்தியமையால், வந்தாறுமூலை, சுங்கன்கேணி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து தப்பி வந்தவர்கள் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

பாதுகாப்பு அளித்த பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகத்தின் முன் வெள்ளைக் கொடிகளை ஏற்றியிருந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய, அன்றைய தினம் காலை 9 மணியளவில் அங்கு வந்த இராணுவத்தினர், தஞ்சமடைந்திருந்த அனைவரையும் வரிசையாக நிறுத்தி, தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை, இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் மட்டக்களப்பு சத்துருகொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவத்தினர் தாக்கி மேலும் பல கிராம மக்களை கடத்திச் சென்றனர். இவர்களில் எவரும் திரும்பி வரவில்லை.

கைதிகளை அழைத்துச் செல்ல கெப்டன் முனாஸ் எனப்படும் இராணுவ அதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்தனர். கெப்டன் முனாஸ், கெப்டன் ரிச்சர்ட் டயஸ் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் அருட்தந்தை ஹரி மில்லர் 1993ஆம் ஆண்டு ‘ஹிரு’ பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முதலாவது நிர்வாகத்தின் போது நியமித்த “கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களில்” ஒன்றான வடக்கு, கிழக்கு ஆணைக்குழு, வந்தாறூமூலை படுகொலை தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

கிருஷ்ணபிள்ளை பாலகிட்ணர் தலைமையிலான மூவரடங்கிய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களுக்கு, கெப்டன் முனாஸ், கெப்டன் பாலித மற்றும் கெப்டன் குணரத்ன ஆகியோரே பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடத்தலில் ஆயுதமேந்திய கும்பலை சேர்ந்த மேஜர் மஜீத் மற்றும் மேஜர் மொஹான் ஆகிய இரு தலைவர்களும் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஆணைக்குழு பதிவு செய்திருந்தது.

1990 செப்டெம்பர் 8ஆம் திகதி முகாமுக்கு வந்த அப்போதைய இராணுவத் தளபதி ஜெரி டி சில்வா, கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக, சாட்சிகள் ஆணைக்குழுவிடம் கூறியிருந்தன.

அந்த ‘குற்றவாளிகள்’ தொடர்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருக்கவில்லை.

எனினும், அந்தந்த ஆணைக்குழுக்களின் செயலாளராக இருந்த எம்.சி.எம். இக்பால், கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்டதாக ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேலதிக சட்ட விசாரணை நடத்தப்படக்கூடாது என உயர் அரசியல் அதிகாரம் உத்தரவிட்டதாக பின்நாட்களில் கூறியிருந்தார்.

The post கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட 150 பேருக்கு சர்வதேச நீதிக்கான கோரிக்கை! appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம்
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (06) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து நித்திரையில் இருந்த போது கடுகதி ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .

இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் சாரதி பிரயாணத்தை மோற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம் appeared first on Oruvan.com.

இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது
இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கல்முனையைச் சோந்த டிலக்ஷன் மற்றும் காரைதீவைச் சேர்ந்த  வன்னியசிங்கம் பரமேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்ததில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் ஜூலை 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷ்ன் என்பவரை நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இனியபாதியின் இன்னெரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையம் விசாரணைக்காக குற்றப் புலானாய்வு பிரிவினர் கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது._

The post இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது appeared first on Oruvan.com.

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஐடியினர் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினரால் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளது அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிள்ளையான் கைதை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான.

முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் சிஐடியினர் கைது செய்தனர்

அதனை தொடர்ந்து இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27) இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டதுடன் பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவரை கடந்த 13ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன்.

கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞர் – மூவர் கைது
மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞனையும் அவரது நண்பனையும் திருட்டு தங்க ஆபரணத்தை வாங்கிய நகைகடை உரிமையாளர் ஒருவர் உட்பட மூன்று பேரை வெள்ளிக்கிழமை (21)) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவைச்சேர்ந்த 18 வயது இளைஞன் தாய், தந்தை இழந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞன் திருடியுள்ளதைக கண்டறிந்தனர்.

இதனையடுத்து சம்பவதினமான வெள்ளிக்கிழமை குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் மற்றும் திருடிய தங்க ஆபரணத்தை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட எட்டு தங்க காப்புக்களை திருடிச் சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை ஒன்றில் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

பணத்தை எடுத்துக் கொண்டு அதில் ஆறு லட்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், கைடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன் ஏனைய பணத்தில் உடைகள் வாங்கியதுடன் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post மட்டக்களப்பில் சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞர் – மூவர் கைது appeared first on Oruvan.com.