Batti News Archives - Oruvan.com

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு 15 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் நான்காம் திகதி நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நிதி நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு ஐந்து லட்சம் ரூபா வீதம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம்
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (06) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து நித்திரையில் இருந்த போது கடுகதி ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .

இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் சாரதி பிரயாணத்தை மோற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம் appeared first on Oruvan.com.

மட்டக்களப்பு அரசடி பகுதியில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் கைது
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமை .

இந்நிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனததை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்தார்.

அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மீது நான்கு பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்தகர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(கனகராசா சரவணன்)

The post மட்டக்களப்பு அரசடி பகுதியில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் கைது appeared first on Oruvan.com.

ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த மர்மப் பொருள் – திறந்து பார்த்தவர் படுகாயம்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்கமுற்பட்டபோதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து சென்றிருந்ததுடன், தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

The post ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த மர்மப் பொருள் – திறந்து பார்த்தவர் படுகாயம் appeared first on Oruvan.com.