Ban Archives - Oruvan.com

நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!
நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் உப்பு கையிருப்புக்கான அவசியம் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

உப்பு உற்பத்திக்கு 45 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்க வேண்டும் என்றும், எனினும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக உப்பு உற்பத்தி தடைபட்டதாகவும், அதனால் உப்பு விளைச்சல் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வரை அது போதுமானதாக இருக்காது என்பதால், உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டால் உப்பை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி உப்பு உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால், 30,000 மெட்ரிக் டொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே! appeared first on Oruvan.com.

மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விதித்த தடை நீக்கம்
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கான கட்டணக் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சுற்றறிக்கைக்கு ஆட்சேபனைகள் எழுந்ததையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

The post மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விதித்த தடை நீக்கம் appeared first on Oruvan.com.

மேல்மாகாணத்தில் கட்டணத்துடன் கூடிய மேலதிக வகுப்புகளுக்குத் தடை
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு

கட்டணத்துடன் கூடிய மேலதிக கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலை நேரம், பாடசாலை நேரத்திற்குப் பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும்

இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கு எதிராக செயற்படுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டது.

The post மேல்மாகாணத்தில் கட்டணத்துடன் கூடிய மேலதிக வகுப்புகளுக்குத் தடை appeared first on Oruvan.com.