auction Archives - Oruvan.com

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
ஏல விற்பனையினூடாக 72,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை செவ்வாய்க்கிழமை

விநியோகிக்கப்படவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட, 17,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட, 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளன.

மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட, 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

The post திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை appeared first on Oruvan.com.

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இந்த நிறுவனங்கள் ஏலம் விடப்படும் என கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளரான பிரதி நிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 104,229,342 ரூபாய் தொகையை வசூலிக்கும் நோக்கில் இந்த மூன்று நிறுவனங்களும் பகிரங்கமாக ஏலத்தில் விடப்படவுள்ளன.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 108,309,342 ரூபாவில், 4,080,000 ரூபா தொகை பிரதிவாதிகளால் செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஏலம் விடப்படுகின்றன.

தயா குழுமம் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில் விடப்படுகின்றன.

The post தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இதில் அடங்கும்.

இந்த வாகனங்களில் இரு BMW வாகனங்கள், 02 போர்ட் எவரெஸ்ட் ஜீப் வண்டிகள், ஒரு ஹூண்டாய் டெரகன் ஜீப், இரு லேண்ட் ரோவர் ஜீப் வண்டிகள், 01 மிட்சுபிஷி மொன்டெரோ, 03 நிசான் பெற்றோல் வகை வண்டிகள், 02 நிசான் கார்கள், ஒரு போர்ஷே (Porsche) கெய்ன் கார், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் வண்டிகள், 01 லேண்ட் குரூசர் சஹரா ரக ஜீப், 06 வீ 8 ஜீப் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் அடங்கும்.

இது தொடர்பான டெண்டர் ஆவணங்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஜனாதிபதி செயலக செமா கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள நிதிப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

மே 14 ஆம் திகதி வரை, இலக்கம் 93, ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள சலுசல நிறுவன வளாகத்தில் இந்த வாகனங்களை பரீட்சிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் முதல் கட்டத்தின் கீழ் முன்னதாக, 14 சொகுசு வாகனங்கள், பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் ஏலம் விடப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட ஏலத்தில், 9 டிபெண்டர் ரக ஜீப் வண்டிகள் உட்பட பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்கப்பட்டன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரத்தர உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அல்ல என்பதோடு அரசியலமைப்பின் 41 (1) வது பிரிவின் கீழ் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களினால் பயன்படுத்தப்பட்டவையாகும்.

The post ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
ஒரு இலட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் (26.03.2025) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

The post திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை appeared first on Oruvan.com.

சொகுசு வாகனங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அரசாங்கம்!
சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரையில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

ஆனால் அவர்களுக்கு எப்போது வாகனங்கள் வழங்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்காக புதிய வாகனங்களை கொண்டு வரமாட்டார்கள்.

இதுகுறித்து அரசாங்கம் பின்னர் பரிசீலிக்கும்” என கூறியுள்ளார்.

The post சொகுசு வாகனங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அரசாங்கம்! appeared first on Oruvan.com.