assembly Archives - Oruvan.com

பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு
இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம்  6  மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்களிப்பதற்காக சுமார் 90 ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும் வன்முறையை ஏற்படுத்த கூடியவாறு சமூக வலைதளம் உள்ளிட்ட வேறு வழிகளில் போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

The post பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார்.

ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா நடத்திய ஒரு நாள் உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, கனடா மற்றம் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தை தொடர்ந்து பிரான்ஸும் தற்போது அறிவித்துள்ளது.

பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, அன்டோரா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளன.

பலஸ்தீனத்தை தனிநாடாக 140 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. எவ்வாறாயினும் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

உலக நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

காசாவில் விரிவடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றக் கட்டுமானம் தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார் appeared first on Oruvan.com.

சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி?
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

”ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம், நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி? appeared first on Oruvan.com.