Asia Cup 2025 Archives - Oruvan.com

ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்
ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது.

துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்திருந்தது.

இந்த தொடரில் இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

அதேநேரத்தில் இந்த தொடரில் இந்திய அணியை மூன்று முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் 19 சதம் ஒரு ஓவர்களின் சலக விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 தசம் நான்கு ஓவர்களின் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ஓட்டங்களை குவித்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

எவ்வாயினும், போட்டி முடிந்த பின்னர் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன் கிண்ணத்தை ஏற்க இந்திய அணி மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

இதனால் கிண்ணம் இன்றியே இந்திய அணி தனது வெற்றியை கொண்டாடியிருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் பெற்றியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, இந்திய அணி வீரர்களை மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஹ்சின் நக்வி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மோஹ்சின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர்.

மாறாக அவர்கள், கோப்பையை கையில் கொண்டு வந்தது போல் சைகை காட்டி தங்களது வெற்றியை கொண்டாடினர். இதில் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அமைச்சர் மோஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பையை பெற்றுக்கொள்ளததால் அந்த கிண்ணத்தை ஆசியக் கிண்ண நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்றது.

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கிண்ணத்தை வாங்க மறுத்ததால் கிண்ணத்தை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பணப் பரிசை அதாவது காசோலையை தூக்கி எறிந்திருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பாரிய அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை இந்த தொடர் முழுவதும் காணமுடிந்தது.

இருநாட்டு வீரர்களும் தங்களின் கோபங்களை பகிரங்கமாக வெளிபப்படுத்தியிருந்தனர்.

லீக் தொடரில் இரு அணிகளும் மோதிய போது, போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்திய அணி வீரர்கள் கை கொடுக்க மறுத்தனர். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளின் போது நாணய சுழற்சியின் போதும் இந்திய அணி தலைவர் பாக் அணி தலைவருக்கு கை கொடுக்க மறுத்திருந்தார்.

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தமை அனுமதித்த போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டை நீக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் முறைப்பாடும் செய்திருந்தது.

மேலும் போட்டிகளில் போது இந்திய ரசிகர்களை சீண்டும் வகயைில் ஜெட் விமானம் தலையில் மோதியது போல் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுப் சைகை காட்டியிருந்தார்.

இதை சர்வதேச கிரிக்கெட் பேரவை கண்டித்து அபராதமும் வித்திருந்தது.

மேலும், போட்டியின் போது அரைச்சதம் அடித்த பின்னர் பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான, தனது துடுப்பாட்ட மட்டையை விமானம் போன்று பாவித்து சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் சர்தேச கிரிக்கெட் பேரவை கடுமையாக எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியிருந்தார்.

போட்டியின் போது அரசியல் பேசியமைக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இப்பயாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்த தொடர் முழுவதும் தங்களின் கோப்தை வெளிப்படையாக காட்டியிருந்தனர்.

The post ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை  – விளையாட்டில் நடந்த அரசியல் appeared first on Oruvan.com.

ஆசியக் கிண்ணம் 2025 – குழு பிஇல் கடும் போட்டி
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இடம்பெற்றுள்ள குழு பிஇல் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி அணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குழு பிஇல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெறு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பங்களாதேஷ் அணி மூன்று லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ள நிலையில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடம்தில் உள்ளது.

எனினும், அந்த அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை காட்டிலும் சிறந்த நிகர ஓட்ட பெறுமதியை கொண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியுன் நாளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கு தீர்க்கமான போட்டியாகும்.

இதில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின் தள்ளி முதலிடம் பிடிப்பதுடன், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

அதேநேரத்தில் இலங்கை அணி பெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிப்பதுடன், பங்களாதேஷ் அணி அடுத்தச் சுற்று தகுதிபெறும்.

எனவே நாளைய போட்டி இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தீர்க்கமானதாக மாற்றியுள்ளதுடன், அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அணிகள் மத்தியிலும் போட்டி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசியக் கிண்ணம் 2025 – குழு பிஇல் கடும் போட்டி appeared first on Oruvan.com.

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள் – வெற்றியை இராணுவத்திற்கு சமர்பிப்பு
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எவ்வாறாயினும், இந்த நட்பு போட்டிக்குப் பின்னர் சர்வதேச ஊடகங்கள் இப்போது இந்திய வீரர்களின் நடத்தையில் கவனம் செலுத்தியுள்ளன.

ஜென்டில்மேன் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டில், போட்டி முடிந்ததும் இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வது வழக்கமானும்.

எனினும், நேற்றைய போட்டிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

போட்டி முடிந்த பின்னர், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே வழக்கம் போல் மைதானத்தின் நடுவில் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அதே நேரத்தில் இந்திய வீரர்களும் பயிற்சி ஊழியர்களும் தங்கள் ஓய்வறைக்குச் சென்று கதவை மூடினர். இந்திய அணியின் இந்த நடத்தை சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர்களிடம் இது குறித்து கேள்வியெழுப்பினர்.

இந்தப் போட்டியின் வெற்றி, ஒபரேஷன் சிந்தூரில் இணைந்த அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தானும் தனது அணியும் இங்கு விளையாட மட்டுமே வந்ததாகவும், அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றியதாகவும் கூறினார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இந்திய அணியிடம் இருந்து இவ்வாறான நடவடிக்கையை தானும் தனது அணியும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியினர் செயல்பட்ட விதத்தில் தாம் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள் – வெற்றியை இராணுவத்திற்கு சமர்பிப்பு appeared first on Oruvan.com.

ஆசிய கிண்ணம் – குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை
ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை இந்திய அணியின் குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீத்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

17வது ஆகிய கிண்ண தொடரின் இரண்டாவது லீக் போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீர அணிகள் மோதியிருந்தன.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீர அணி 13.1 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்திய சார்பில் 2.1 ஓவர்கள் வீசி ஏழு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் நான்கு ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.

The post ஆசிய கிண்ணம் – குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை appeared first on Oruvan.com.

ஆசிய கிண்ண தொடர் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஹொங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்திருந்தது.

அஸ்மத்துல்லா உமர்சாய் 20 பந்துகளில் ஐந்து ஆறு ஓட்டங்கள் அடங்களாக 53 ஓட்டங்களை குவித்திருந்தார். இது இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் ஒருவர் அடித்த வேகமான அரைசதமாகும்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவிக்கொண்டது.

ஆசிய தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய கிண்ண தொடர் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி appeared first on Oruvan.com.