Ashoka Archives - Oruvan.com

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் கோரினர்.

அசோக சேபால சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அதுகோரல, தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

இதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முறையான குத்தகை நடைமுறையை கடைப்பிடிக்கத் தவறியதால் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக

அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

“நான் பொய்யுரைக்கவில்லை” அசோக சபுமல் ரன்வல விளக்கம்
நாட்டு மக்களுக்கு தான் ஒருபோதும் பொய்யுரைக்கவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு உண்மைய நிரூபிப்பதாகவும் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார்.

‘ஒருவன்’ செய்திப்பிரிவின் சகோதர ஊடகமான ‘மொனரா’ டிஜிட்டல் தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதனை மேலும் விளக்கிய அவர்,

“எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சவாலுக்கு உட்படுத்தும் விதத்திலான ஒரு நிலை உருவானது. அதன்காரணமாக, அதற்கு மேலும் நான் அந்த பொறுப்பில் தங்கியிருப்பது என்பது நல்லதல்ல. நான் பதவியிலிருந்து விலகி என் மீது எழுப்பப்பட்ட அவதூறுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய ஒரு தேவை எனக்கு இருந்தது.

ஆகவே, கட்சியுடன் கலந்தாலோசித்து அந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டேன்.” எனத் தெரிவித்தார்.

பதவிகளை பற்றிக் கொண்டு இருக்காமால், அத்தகைய அபாயகரமான ஒரு சூழலில் அவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post “நான் பொய்யுரைக்கவில்லை” அசோக சபுமல் ரன்வல விளக்கம் appeared first on Oruvan.com.

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுத்துமூலமான சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக அறிக்கை வெளியிட்டு, கடந்த 13ஆம் திகதி அசோக ரன்வல பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

எனினும், தற்போது இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவருடைய அந்த கல்வித்தகைமையை உறுதிப்படுத்தும் எந்தவொரு எழுத்துமூல ஆவணமும் முன்வைக்கப்படவில்லை.

ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகத்திலிருந்து “கலாநிதி” பட்டத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும், மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழையும் இதுவரையில் அவர் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் appeared first on Oruvan.com.