Army Archives - Oruvan.com

அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சூசன் கோய்ல், பல முக்கிய கட்டளைப் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அவுஸ்திரேலிய இராணுவத்தின் எந்த சேவைப் பிரிவிற்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆகும்.

இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் மத்தியில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

தற்போது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் சுமார் 21% பெண்கள் பணியாற்றுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 25% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், தற்போதைய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் மார்க் ஹேமண்ட், அவுஸ்திரேலியா பாதுகாப்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

The post அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம் appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

பாகிஸ்தானின் உயர் அதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜனாதிபதி உட்பட முப்படைகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் appeared first on Oruvan.com.

இந்திய இராணுவம் குறித்து காங்கிரஸ் பெருமிதம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இந்திய இராணுவத்தை, காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

எங்கள் ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஜெய் ஹிந்த் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, எவரேனும் இந்திய குடிமக்களை அச்சுறுத்தினால் அவர்கள் அதே விதியை சந்திப்பார்கள் என

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

தங்கள் இராணுவம் அதனை மீண்டும் நிரூபித்துள்ளது எனவும் அவர் பெருமிதமடைந்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என்று நாங்கள் உறுதியளித்திருந்தோம்.

எவரேனும் இந்தியாவை அச்சுறுத்தினால், அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்திற்கு நாம் ஆதரிப்போம். நாடு ஒற்றுமையாக உள்ளது” என்றார்.

இதேவேளை, ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ஆயுதப் படைகளின் சாதனையை காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே பாராட்டியுள்ளார்.

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை என்றும் 26 பேரின் உயிரைப் பறித்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இந்திய இராணுவம் குறித்து காங்கிரஸ் பெருமிதம் appeared first on Oruvan.com.

வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்ன சம்பவ இடத்திற்கு வருகைதந்த நிலையில், அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக வைத்தியசாலை நிர்வாகம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளது.

இதனையடுத்து குறித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின் பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது appeared first on Oruvan.com.

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முப்படை வீரர்கள் நீக்கப்பட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

The post இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம் appeared first on Oruvan.com.