Archuna Archives - Oruvan.com

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளார். பின்னர்  சம்பவத்துடன் தொடர்புடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்  இளவாலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையஅரச்சுனா வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்   அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இராமநாதன் அர்ச்சுனாவின் கைத்துப்பாக்கியும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – சிவ பூஜையில் புகுந்த கரடி என அமைச்சர் விசனம்
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன்

குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தனிப்பட்ட விடயங்களை முன்வைத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே  வாய்த்தர்க்கம் காரணமாக சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் இராமலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன்.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.

தொல்லை தாங்க முடியாமல் எம்.பி ஒருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் தெரிவித்துள்ளார்.

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்.” என்றார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

The post ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா  – சிவ பூஜையில்  புகுந்த கரடி என அமைச்சர் விசனம் appeared first on Oruvan.com.

புதுக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பலரால் தான் அச்சுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இந்த அமர்வுகளுக்குப் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இந்த பிரச்சினை நமது நாட்டில் மிகவும் முக்கியமானதாகிவிட்டதால், குறைந்தபட்சம் பொது அமர்வுகளின் போது எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த விவகாரம் சபாநாயகரிடம் பரிந்துரைக்கப்படும் என்று துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு அறுவை சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும்

சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில்

ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​ அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு அறுவை சிகிச்சை appeared first on Oruvan.com.

100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி!
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார்.

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியநிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பனம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.

மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவன்களை பொறுபுக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார்.

இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

The post 100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி! appeared first on Oruvan.com.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

The post இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! appeared first on Oruvan.com.