Archchuna Archives - Oruvan.com

நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏன் என்று கேள்வி கேட்டால், கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்.

இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது . எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்,” என்று அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

The post நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது அடிப்படை தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான தகவல்களை இவ்வாறு ரகசியமாக மறைப்பது வெளிப்படைத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு ஜனநாயக சமூகத்தில், வெளிப்படைத்தன்மை என்பது வெறும் ஒரு விருப்பமல்ல – அது ஒரு கட்டாயமாகும்.

இந்த காட்சிகளை வெளியிட மறுப்பது நமது ஆளும் நிறுவனங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அவற்றின் உறுதிப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த காணொளியை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், வடக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம் appeared first on Oruvan.com.

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி
வவுனியா – ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத் தீர்மானத்தையும் மீறி பொலிஸார் மீண்டும் காணியினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிஸார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் அரசியலமைப்பின் படி, அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.

பின்னர் குறித்த மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

The post நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on Oruvan.com.

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது செம்மணியில் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்க அரசாங்கம் நிகழ்ச்சி நிரல் ஒன்றை செய்திருந்தது.

எனினும், அதையும் தாண்டி மக்கள் அவரை சந்தித்திருக்கின்றார்கள். செம்மணியில் இருந்து நேற்று ஆறு வயது குழந்தையில் எலும்புக் கூடு ஒன்றை யுனிசெப் நிறுவனத்தின் பை ஒன்றுடன் நேற்று மீட்டிருந்தனர்.

ஆறு வயது, மூன்று மாத குழந்தைகளை அங்கு புதைத்திருக்கின்றனர். தற்போது வரை அங்கு 33 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய முடியுமாக இருந்தால், பட்டலந்த விடயம் தொடர்பில் யாரையேனும் சிறையில் அடைக்க முடியுமாக இருந்தால் ஏன் செம்மணி குறித்து விசாரணை செய்ய முடியாது.

நான் போர் வீரர்களை மதிக்கின்றேன். ஆனால் ஆயுதம் ஏந்திய அனைவரும் போர் வீரர்கள் அல்ல

இலங்கை வந்திருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையருடன் சிறிதரன் எம்.பி மட்டுமே பேச முடியும் என அரசாங்கத்தின் அமைச்சராக பிமல் ரத்நாயக்க கூறினார். ஆனாலும் நான் மனித உரிமைகள் ஆணையருடன் கதைத்திருந்தேன்.

பின்னர் செம்மணிக்கு அழைத்துச் சென்ற போது மனித உரிமைகள் ஆணையரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. எனினும், தான் ஆணையாளருடன் கதைத்து செம்மணியில் மக்களை சந்திக்கச் செய்தேன்.

அன்றைய தினம் அரசாங்கத்தின் அமைச்சர் சந்திரசேகரன் காலில் செறுப்பு இல்லாமல் ஓடினார். அவருடைய செறுப்பு என்னுடைய காரில் தன் தற்போதும் இருக்கின்றது. அதை அவர் வந்து எடுத்துச் செல்லலாம்.

இராமநாதன் அர்ச்சுனாவை தமிழ் மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்று அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அதே தமிழ் மக்கள் காலில் செறுப்பு இல்லாமல் அவர்களை விரட்டியடித்துள்ளனர். எங்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள் என்ற தான் தமிழ் மக்கள் கோருகின்றார்களே தவிர நாடு இரண்டாக பிளவடைய வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

போர் வீரர்களில் 98 வீதம் பேர் குற்றம் செய்யவில்லை. ஆனால் இரண்டு வீதம் பேர் குற்றம் செய்துள்ளனர். அந்த இரண்டு வீதமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சிறந்த அரசியல் நண்பர்கள். அவரை கண்டால் கதைக்காமல் செல்ல முடியாது. ஆனால் அவரின் தந்தை மகிந்த ராஜபக்ச தமிழர்களின் படுகொலைக்கு பதில்சொல்ல வேண்டும்.

செம்மணியில் இருந்து 33 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு உண்மையில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதற்கு நானும் சாட்சி, எனது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, சோதனை செய்யமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இருந்தது என்னவென்று பட்டியல் ஒன்றையே என்னால் தரமுடியும். 15 ஆண்டுகாக வெளிவராமல் இருந்து தமிழ் மக்களின் தங்கம் எங்கிருந்து வந்தது.

அவை அனைத்து வேறு ஒரு நாட்டில் இருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்த அனைத்து தகவல்களும் என்னால் வழங்க முடியும். ஆனாலும் எனக்கு பயமாக இருக்கின்றது. நான் மரணத்திற்கு ஒருபோதும் பயப்படவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி தகவல்
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதனர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி,

“இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

முன்னதாக 2011ஆம் ஆண்டும், 2016ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு விரவிடாமல் செய்திருந்தனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் கட்டயாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில், நாளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் சந்திக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிதரன் ஐயா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஐயா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை அவர்கள் மனித உரிமைகள் ஆணையரிடம் கூற உதவிசெய்ய வேண்டும்.

இதனிடையே, நாளைய தினம் என்னை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுக்க உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், நான் கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்.

இதன்போது தமிழர்களுக்கு எதிரான நடந்த அனைத்து இனப்படுகொலை சம்பவங்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதுடன், அதற்கான முழு ஆவணங்களும் தயார்ப்படுத்தக்கப்பட்டுள்ளன.

எனினும், அதை கொடுக்க கூடாது எனவும் இதனை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி தகவல் appeared first on Oruvan.com.

காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.

வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட விடையங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடையங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கதைகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடையங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் சண்டையிட்டனர்.

இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது ஆழுமையற்றவராக காணப்பட்டார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆழுமையற்ற நிலையை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விடு வெளியேறி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை
நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேமாலி வீரசேகர, விஜித ஹேர்த் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை appeared first on Oruvan.com.