Appointment Archives - Oruvan.com

பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post பதில் அமைச்சர்கள் நியமனம் appeared first on Oruvan.com.

பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

The post பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் appeared first on Oruvan.com.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதம்
நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று சனிக்கிழமை (24) வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9.30 இற்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும்

அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதன்போது தாதியர் சேவையில் சிறப்பு தரத்தில் உள்ள 79 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

The post மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதம் appeared first on Oruvan.com.