appointed Archives - Oruvan.com

மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்
இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய துணை ஆளுநர்களை நியமித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, 2025 ஒக்டோபர் 24 முதல்  அமுலுக்கு வரும் வகையில் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாார்.

முன்னாள் உதவி ஆளுநரான கே.ஜி.பி. சிறிகுமார, 2025 நவம்பர் 3 ஆம் திகதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள், நிறுவனத்திற்குள் தலைமைத்துவத்தையும் மேற்பார்வையையும் வலுப்படுத்த மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம் appeared first on Oruvan.com.

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் நால்வர்

நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில்  வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் பங்கேற்றுள்ள நிலையில் வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

The post பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் appeared first on Oruvan.com.

புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்
கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

மின் உபகரண விற்பனை நிலையத்தின் நான்காவது மாடியில் நேற்று (20) மாலை தீ பரவல் ஏற்பட்டது. இதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொரு கட்டிடத்திலும் தீ பரவியது.

பின்னர் 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post புறக்கோட்டை தீ விபத்து –  விசேட குழு நியமனம் appeared first on Oruvan.com.

யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
யாழ். பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்து மூல கடிதம் ஒகஸ்ட் 27 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிக்கவுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை பயின்ற குமாரவடிவேல் பௌதீக துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.

பிரிஸ்டல் பல்கலைகழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைகழகத்தில் பணியாற்றியள்ளார்.

2006-2007 ஆம் ஆண்டுகளில் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்பெடுத்து சிறப்பு பணியாற்றியிருந்தார்.

2015 முதல் 2020 வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தார்.

Professor Rajaratnam Kumaravadivel appointed as Chancellor of the University of Jaffna

The post யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம் appeared first on Oruvan.com.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்

இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.

நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.

பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்

இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.

The post இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  நியமனம் appeared first on Oruvan.com.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.

The post சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம் appeared first on Oruvan.com.

கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்
கொஸ்கம – சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரால் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளையைச் சேர்ந்த 12 வயது மகள், 30 வயதுடைய அவரது தாய் மற்றும் 44 வயதான மற்றுமொருவர் ஆகியோரே இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர்.

இசைக்கச்சேரியை பார்வையிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே மூவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம் appeared first on Oruvan.com.

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்

தேசிய மக்கள் சக்தி (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் பணியாற்றிய இவர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

The post நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் appeared first on Oruvan.com.

பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்
நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

The post பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம் appeared first on Oruvan.com.

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகங்களுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்திற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் appeared first on Oruvan.com.