Anura Kumara Archives - Oruvan.com

ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை தற்போதைய அரசாங்கம் கடுமையாக கையாளுகின்றது.

இதனால் அரசாங்க தரப்பினர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவிற்கு உதவினால், மற்றொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிலிருந்து வெளியேற முற்பட்டால் உயிரை பறிகொடுக்க நேரிடும் எனவம் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே appeared first on Oruvan.com.

LGBTQ ஊக்குவிப்பு மீதான தடையை எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மல்வத்த, அஸ்கிரி, அமரபுர பிரிவுகளைக் கொண்ட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

சில குழுக்கள் ஓரினச்சேர்க்கை நடத்தை மற்றும் தொடர்புடைய நடைமுறைகளை இயல்பாக்க முயற்சிப்பதாக மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சிங்கள பௌத்த கலாச்சார விழுமியங்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு நாட்டின் கலாச்சார அடையாளம், வரலாற்று பாரம்பரியம் மற்றும் ஒழுக்க மரபுகளைக் கருத்தில் கொள்ளாமல், குறுகிய மனப்பான்மை அல்லது குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஆட்சி செய்ய முயற்சிப்பது, அராஜகத்திற்கும், முழு சமூகத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்படும் சில நடவடிக்கைகள் அராஜகத்திற்கும், பல சமூக நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 82 இல் முன்மொழியப்பட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மூலம் ஓரினச்சேர்க்கை சார்ந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பௌத்த தத்துவ விழுமியங்களின் சிறப்பையும், அவை நிலையான சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வரும் ஜனாதிபதி, இந்த விடயத்தில் விரைந்து கவனம் செலுத்துவார் என்று தேரர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த நெறிமுறையற்ற செயல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post LGBTQ ஊக்குவிப்பு மீதான தடையை எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் appeared first on Oruvan.com.

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இஷிகுரோ நொரிஹிகோவின் (ISHIGURO Norihiko) பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் மற்றும் ITOCHU இன் தலைவர் புமிஹிகோ கொபயாஷி (Fumihiko Kabayashi) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளியாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் ஊடாகப் பெறக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையில் இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாத வகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும்.

வடக்கின் மக்கள் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இனிமேல் போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்கி   சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாடிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும்,  இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும்  தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது  நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படும்  இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில்  பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது  ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

தமது எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

இவற்றைக் கட்டுப்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் சமீபத்திய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் சிக்கலான சவாலாக மாறியுள்ளது.

நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை சாதனை விகிதத்தில் ஆக்கிரமித்துள்ளன.

போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளன.

இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மாநிலங்களை இரையாக மாற்றுகின்றன. இந்த பேரழிவு உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நலனுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக இது மாறிவிட்டது.

இலங்கையில் இந்தப் பெரும் கொள்ளை நோயை ஒழிப்பதற்கான ஒரு நேர்மறையான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இதேவேளை, உலகில் போரை விரும்பும் எந்த தேசமும் இல்லை. போர் அல்லது மோதல் ஏற்படும் போதெல்லாம், அது சோகத்தில்தான் முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த தருணத்திலும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம்.

போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவு இடங்களுக்கு வந்து, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வலிமிகுந்த வேண்டுகோள்களை கூப்பிய கைகளுடன் பார்க்கும் எவரும், போரைக் கனவு காணக்கூட விரும்ப மாட்டார்கள்.

அந்த வேதனையான காட்சியை நம் கண்களால் பார்த்திருக்கிறோம்.

காசா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு நமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காசா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது.

அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அழுகை காது கேளாததாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி, இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.

அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும், அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஒரு அரசுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இருவரின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கவலைகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும்” என ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார இன்று உரை
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15க்கு ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்கா பயணமானார்.

இதன்படி அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 8.15க்கு அமெரிக்காவின் ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி சென்றடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியை வரவேற்றிருந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த பயணத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க ஜப்பானுக்கு அரச பயணம் ஒன்றில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார இன்று உரை appeared first on Oruvan.com.

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் – அஜித் தர்மபால தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அல்லது பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்ட ஒரு கொலையாளி மூலம் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகவல் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும், அதைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

The post ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் – அஜித் தர்மபால தகவல் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்கா பயணம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (22) அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்றிரவு அமெரிக்காவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி புதன் கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஜனாதிபதி ஜப்பானில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் பேரரசரை சந்திக்கவுள்ளார்.

மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து டோக்கியோவில் உள்ள முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும்

முதலீட்டாளர்களின் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

2025 எக்ஸ்போதினத்தை முன்னிட்டு ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்கா பயணம் appeared first on Oruvan.com.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.

168.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் கட்டம் கடவத்தை முதல் மீரிகம வரை 37 கிலோமீற்றர் நீளமும், இரண்டாவது கட்டம் மீரிகம முதல் குருணாகல் வரை 39.7 கிலோமீற்றர் நீளமும், மீரிகம முதல் அம்பேபுஸ்ஸ வரை ஒன்பது தசம் ஒரு கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மூன்றாவது கட்டம் பொத்துஹெர முதல் கலகெதர வரை 32.5 கிலோமீற்றர் நீளமும், நான்காவது கட்டம் குருணாகலிலிருந்து தம்புள்ள வரை 60.3 கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது கட்டமான மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் மீளவும் ஆரம்பித்து வைப்பு appeared first on Oruvan.com.

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.

முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.

அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.