Anura Kumara Dissanayake Archives - Oruvan.com

அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவால் 2026ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.

இந்த வர்த்தமானியின்படி,, சமூக வாழ்க்கைக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறு அபாயத்தையும் கருத்தில் கொண்டு, பொது நிறுவனங்கள், அரச துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் வழங்கும் சேவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.

அத்தியாவசிய சேவைகளில் மின்சார வழங்கல், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் சாலைகள், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு ஆகியவையும் அடங்கும்.

மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகால், உணவு விநியோகம், வேளாண்மை சார்ந்த சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவையும் அத்தியாவசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உத்தரவானது, ஆம்புலன்ஸ் சேவைகள், அரச வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், மேலும் கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர்கள் போன்ற களநிலை அலுவலர்கள் உட்பட, மாவட்ட மற்றும் கோட்டச் செயலகங்களால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நிர்வாகப் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.

கழிவு மேலாண்மை, தீயணைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் போன்ற உள்ளாட்சி அமைப்பு சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

டித்வா புயலைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதையும், நாட்டில் இயல்பு நிலையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் செர்ஜியோ கோர்டுடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

The post அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி, கத்தார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

தற்போதைய பிராந்திய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, கத்தார் நாட்டுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலைமையை விளக்கிய கத்தார் அமீர், இலங்கையர்கள் உட்பட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.

ஹர்முஸ் சமுத்திர சந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

உலகளாவிய வலுசக்தித் துறையில் கத்தார் நாடு எப்போதும் நம்பகமான பங்காளியாக செயற்படும் என்றும், சவால்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் கத்தார் அமீர் மேலும் தெரிவித்தார்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக, பதற்றமான சூழ்நிலையை விரைவாகத் தணிக்க வேண்டும் என்றும், போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலம் இராஜதந்திரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.

The post ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

தென் மாகாண ஆளுநர் பதவியேற்றார்
தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு இன்று (25) காலை காலியில் உள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் பதவியேற்றார்.

தென் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பின் 154B பிரிவின்படி, நேற்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தென் மாகாண ஆளுநர் பதவியேற்றார் appeared first on Oruvan.com.

யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்
யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தைமாதம் பொங்கல் தினத்தில் வட மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் அன்று மாலை வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அன்றைய தினமே மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

மறுநாள் யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் “முழு நாடுமே ஒன்றாய்” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கான நிதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுத்த நிலையில் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து பெரும் எடுப்பில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்காக மண்டப ஒழுங்கமைப்பு சுமார் 52 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவும் சிற்றுண்டி உபசரணைக்காக சுமார் சுமார் 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் பங்கு பற்றிய பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 23 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாவும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளுக்காக சுமார் 51 ஆயிரத்து 700 ரூபாவாக செலவு காட்டப்பட்டுள்ளது.

வரவேற்பு செலவினமாக 23 ஆயிரத்து 375 ரூபாவும் , குடிநீர் மற்றும் மலசல கூடத்திற்காக சுமார் 36 ஆயிரம் ரூபாவும் , முன்னாயத்த வேலைகள் மறுசீரமைப்புக்காக சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவாகவும் ஏனைய செலவுகளுக்காக சுமார் 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவாகவும் செலவு காட்டப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் யாழில் தைப்பொங்கல் மறுநாள் இடம் பெற்ற ஒரு நிகழ்வுக்கு மாத்திரம் இவ்வாறு பாரிய ஒரு தொகை செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

The post யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் appeared first on Oruvan.com.

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும் (Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது.

இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் விசேட இரவு விருந்து உபசாரத்திலும் ஜனாதிபதி இன்று (18) கலந்துகொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரச தலைவர்கள் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (19) உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன், மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

The post புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது.

இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 07 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

இக்கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது appeared first on Oruvan.com.

இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியாத இணைந்து நடத்தும் 2026 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.

போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பாகிஸ்தான் அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் பேரவை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் சபை தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இறுதியில் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி திட்டமிட்டப்படி இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சரும் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு appeared first on Oruvan.com.

சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

உலக நாடுகள் தங்கள் சுதந்திர தினங்களில் படைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளின் வெற்றிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றன, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிகள் கூட பேசப்படுகின்றன.

டித்வா சூறாவளியின் போது ஆயுதப்படைகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி பேசினார், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வீரர்களின் வெற்றிகளைப் பற்றிப் பேச அவருக்கு தைரியம் இல்லை.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி இனவெறி என்று அரசாங்கம் நினைத்தால், அது அப்படியல்ல. நாங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் போராடவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை சொல்லிய ஜனாதிபதி – ஹர்ஷ டி சில்வா
நாடு காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு பொருளாதார சுதந்திரத்தை அடைவது அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர கொண்டாட்டத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நேரடி காணொளியை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாடு இன்னும் பொருளாதார சுதந்திரத்தை அடையவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், உண்மையான சுதந்திரம் என்பது மக்கள் தங்கள் உழைப்பையும் செல்வத்தையும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளும் திறன் என்று சுட்டிக்காட்டியிருந்தார்

முழு உலகத்துடன் தொடர்புகொள்ளும் வகையில், தொடர்பு பாலங்களை அமைப்பதும், நாட்டு மக்களின் திறன்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், அதன் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு அமைப்பை உருவாக்குவதும் தனது தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை சிறப்பு கவனம் செலுத்திய ஹர்ஷ டி சில்வா, இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை ஜனாதிபதி குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார்.

“75 ஆண்டுகளாக நாட்டில் நல்லதும் கெட்டதும் நடந்தேறி வருகிறது” என்று கூறி, 75 ஆண்டுகால சாபம் என்ற கருத்தை ஜனாதிபதி இன்று தனது உரையில் நிராகரித்ததாக ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

“எல்லாமே கெட்டவை அல்ல என்றும் நாங்கள் சொல்லி வருகிறோம். வரலாற்றில் நடந்த நல்ல விஷயங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ” என்று அவர் குறிப்பிட்டார்.

78 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் அடையப்பட்ட வலுவான மற்றும் நியாயமான சாதனைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய ஹர்ஷ டி சில்வா, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு வலுவான நாடாக முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

The post இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை சொல்லிய ஜனாதிபதி – ஹர்ஷ டி சில்வா appeared first on Oruvan.com.