Anura Jaffna Visit Archives - Oruvan.com

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.

முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.

அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று (02.09.2025) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் .

நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (02) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் நண்பகல் 1மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மிகநீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்க வந்த ஜனாதிபதி அவர்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் வரவேற்றிருந்தார்.

தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

The post வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் ஆரம்பமான போராட்டத்தில் இணைந்த சிவில் ஆர்வலர் எஸ்.ஆர். குமரேஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என நேற்றைய தினம் (செப்டெம்பர் 01) தெரிவித்தார்.

“இந்த காற்றாலையால் மன்னார் தீவு இன்று அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீவில் வாழும் 75,000 மக்களும் இடம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்படப்போகிறது. அந்த மக்கள் இடம்பெயர்ந்து பெரு நிலப்பரப்பில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இவ்வாறான அழிவுகளை நிறுத்த வேண்டும். காற்றாலைக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.”

மன்னார் தீவில் மேலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டால், ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தீவின் மக்கள் வேறு இடங்கனுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டும் சிவில் சமூக ஆர்வலர், இது போர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்கனவே காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள வடக்கு மக்களுக்கு இடையில் ஒரு மோதலை ஏற்படுத்தும் என வலியுறுத்துகின்றார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனவும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரலின் பின்னர் மன்னார் தீவில் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலைத் திட்டம் இரண்டு ஆகியவற்றிள் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.

மன்னார் தீவில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக ஓகஸ்ட் 11ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த பிரதேச மக்கள், மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தி நிலைய விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மன்னார் பிரதான பாலத்தின் அருகே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, மேலும் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்க பொலிஸார் நிறுத்தப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதோடு, கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

ஒரு மாதத்தைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பொது அமைப்புகள் காற்றாலை திட்டங்களை மீளப்பெறும் வரை போராட்டை நிறுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

The post ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது appeared first on Oruvan.com.

தையிட்டி திஸ்ஸ விகாரை – கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாத ஜனாதிபதி
வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான நேற்றைய அடிக்கல் நாட்டு விழாவில் சர்வமத தலைவர்கள் வரிசையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது தொடர்பில் கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாது, ஜனாதிபதி செயற்பட்டமை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பேசப்பட்ட போது எதுவித பதிலும் பேசாது மௌனமாக இருந்த ஜனாதிபதி, விகாரைக்கு மாற்றுக் காணிகளை வழங்க துணை போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் காணி மக்களுக்கே என்றும் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என பேசும் ஜனாதிபதி அது தொடர்பில் உண்மையாகவே செயற்படுகிறாரா என காணி உரிமையாளர்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

The post தையிட்டி திஸ்ஸ விகாரை – கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாத ஜனாதிபதி appeared first on Oruvan.com.

யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post யாழ் நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது.

இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இம்மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தைத் தொடங்கவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும்,  அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேச தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது

The post யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோல் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதியமைச்சர் சுனில் வட்டஹல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ, யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தின் 60வது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் இதன்போது வெளியிடப்பட்டது.

The post யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார வருகைதந்தார்.

இதன்போது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

பொலிஸார், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தூஷண வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளினர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

The post மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார் appeared first on Oruvan.com.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன் – யாழில் ஜனாதிபதி சூளுரை
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இனவாதத்தின் அடிப்படையில் வடக்கையும், தெற்கையும் குழப்பும் வகையில் சில அரசியல்வாதிகள் திட்டமிட்டுகொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே எந்தவொரு இனவாத அரசியலுக்குள்ளும் சிக்கி இரையாக வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பதித்து வைத்த பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

பிரிந்திருந்த நாட்டு மக்களை கடந்த கால ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்கள் ஒன்றிணைத்துள்ளது. இனி ஒருபோது நாட்டு மக்கள் பிரிந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலைநாடு என பிரிந்திருக்காமல் ஒரு நாட்டு மக்களாக வாழவேண்டும். அதற்காக அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாண மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து நாங்கள் விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ளோம்.

வடக்கில் அதிகளவான விவசாய தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யுத்தம் காரணமாக பாரிய அளவிலான காணிகளை படையினர் கைப்பற்றி முகாம்களை அமைந்திருந்தனர். இனிநாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான சூழல் இல்லை.

யுத்தம் வரும் என்ற நோக்கத்துடன் அந்த காணிகளை இனி வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் மீண்டும் ஒரு யுத்தம் வருமென எண்ணி அந்த காணிகளை வைத்திருந்தன.

இந்நிலையில், திறந்துவிடக்கூடிய அனைத்து வீதிகளையும், விடுவிக்க வேண்டிய அனைத்து காணிகளை நாங்கள் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம்.

அதேபோல், வடமாகாண மீனவர்களின் பிரச்சினை குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அதற்காகவே மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து எமது கடற்பரப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் கச்சத்தீவை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.

இன்று மாலை கச்சத்தீவிற்கு சென்று அங்குள்ள மீனவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன். எமது நாட்டின் நிலம், கடல், வானம் என அனைத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது எங்களின் தார்மீக பொறுப்பாகும்.

எமது நிலம், கடல் மற்றும் வான்பரப்பிற்கு அச்சுறுத்தைலை ஏற்படுத்தும் எந்தவொரு சக்திக்கும் நாம் அடிப்பணியப் போதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன் – யாழில் ஜனாதிபதி சூளுரை appeared first on Oruvan.com.

மயிலிட்டித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின.

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

The post மயிலிட்டித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு appeared first on Oruvan.com.