Anura india visit Archives - Oruvan.com

ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்
இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது.

அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார்.

மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை நிரூபித்துள்ளதுடன் ஒரு வலுவான அரசியல் நபராகவும் உருவெடுத்துள்ளார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அநுர?

தனது ஆட்சியில் முதல் 100 நாட்களுக்குள் அதிகாரத்தை நிறுவி, மக்களின் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார் பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், சில வாரங்களுக்குள் தனது அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட நாடாளுமன்றின் முதல் சபாநாயகரை இழந்த போதிலும், தொடர்ந்து ஒரு வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்தி வருகின்றார்.

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நிறைவேற்றப்படாத சில நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்ற பிக்கர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிபத்த வழக்கை விசாரிக்க கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரண்டு மூத்த புலனாய்வாளர்களை நியமித்தார்.

மேலும், விசாரணைகள் குறித்து கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தி தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும, அவர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பிள்ளையான் என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டார்.

கூடுதலாக, வரி ஏய்ப்பு செய்ததற்காக அர்ஜுன் அலோசியஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்து வந்தவர்கள் விரைவாக பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மெண்டிஸ் டிஸ்டில்லரீஸின் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.

பொருளாதார முன்னேற்றம்

அநுரவின் ஆட்சியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, மேலும் பங்குச் சந்தையில் 40 வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் இராஜதந்திர முயற்சிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும்பாலும் சுமூகமாக நடந்துள்ளன.

இருப்பினும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனினும் அந்தப் பிரச்சியை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

மேலும், பொலிஸ்மா அதிபர், தலைமை நீதிபதி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு முயற்சிகள்

ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம் பலரிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளதுடன் பரவலான ஆதரவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

எவ்வாறாயினும், அநுரவின் தலைமைத்துவம் அதிர்ச்சியூட்டும் சீர்திருத்தங்கள் உட்பட தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சிலர் கணித்திருந்தாலும், அவர் படிப்படியாக ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இதனை மெதுவான வேகம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மாற்றத்தின் அளவிடப்பட்ட வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அநுர முன் உள்ள சவால்கள்

சந்தேகத்திற்கு இடமின்றி, இனப் பிளவுகளை சரிசெய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்போது ஜனாதிபதி அநுரகுமார ஏராளமான முக்கியமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, வேறூன்றி போயிருக்கும் ஊழலை ஒழிப்பதும், சில அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதும் எளிதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அநுரகுமாரவின் குழுவினர் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் இன்னும் அனுபவம் போதவில்லை எனவும் இது வெளிப்படையாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார மக்களின் ஆதரவுடன் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார், ஆனால் இப்போது அவர் அரசியல் உயரடுக்கின் சிக்கலான இயக்கவியலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

The post ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும் appeared first on Oruvan.com.

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?
தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை

இந்தியா அதன் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செல்படுவதாக கூறுகிறது. ஆனால், அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான போக்கு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதுடன், பல நாடுகள் இந்தியாவின் தலையீட்டை நேரடியாக எதிர்த்துள்ளன.

மாலைத்தீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸு, இந்திய படைகளை மாலைத்தீவிலிருந்து வெறியேறுமாறு கூறியதுடன், சீனாவுக்குச் சார்பான போக்கை பின்பற்ற ஆரம்பித்தார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் ஓரளவு சுமூகமாகியுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தை துருக்கிக்கே மேற்கொண்டிருந்தார்.

இது இதற்கு முன்பு மாலைத்தீவு ஜனாதிபதிகள் பின்பற்றிய இந்திய பயணத்துக்கு மாறாக அமைந்தது. நேபாளத்திலும் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகள் உருவாகியுள்ளன. நோபாளம் இந்து மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாக உள்ள போதிலும், அங்கு இந்தியாவின் செல்வாக்கை அவர்கள் விரும்பவில்லை. இதனால் நேபாளப் பிரதமராக தெரிவான ஷர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார்.

பங்காளதேஷிலும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிராக உள்ளது. குறிப்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி இந்தியாவுக்கு சார்பாக இருந்ததாக அவரது ஆட்சிக்காலத்தில் பல எதிர்ப்புகள் இருந்தன. அதனால் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ் அமெரிக்காவிற்கே தமது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நாடு. அதேபோன்று ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் செல்வாக்கை விரும்பாத நாடு.

அநுரவுக்கு டில்லி சிவப்பு கம்பள வரவேற்பு

விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில்தான் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அது இந்நாட்டின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், இதனை சமாளித்து சீனாவின் செல்வாக்கை இலங்கையில் தவிர்க்கும் வண்ணம் தமது இராஜதந்திர நகர்வுகளை புதுடில்லி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்திய தீப கற்பத்தில் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களது கருத்து.

அதேபோன்று இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகள் எடுக்கப்பட்டால் அது இலங்கைக்கு இருள் சூழ்ந்த யுகத்தை உருவாக்கும் என்பதும் யதாரத்தம். இதனை உணர்ந்தவர்களாகதான் கடந்தகால இலங்கையின் ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் மாத்திரம் ஓரளவு இந்தியாவின் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், 2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி இருதரப்பு உறவை வலுப்படுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கொள்கைகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றே அவர் ஆட்சிக்குவர முன்னர் பரவலாக எதிர்வுக்கூறப்பட்டது. ஆனால், அவர் ஆட்சிக்கு வர முன்னரே புதுடில்லி அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்திருந்ததுடன், ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதுடில்லிக்கு அழைத்து மகத்தான கௌரவத்தை வழங்கி அவரை தமது பாதைக்கு நகர்த்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை

சீனாவின் பரந்தப்பட்ட முதலீடுகளால் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா அதன் செல்வாக்கை இழந்துவரும் சூழலில் இலங்கையுடனான இராஜதந்திர உறவை மிகவும் வலுப்படுத்திக்கொள்ளும் தேவை இந்தியாவுக்கு உள்ளது. அதன் காரணமாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை விரைவாக வலுப்படுத்தும் தேவை இந்தியாவுக்கு எழுந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி அநுரவின் சில கருத்துகள் சாதகமாக இருப்பதாக இந்தியா கருதுவதுடன், அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் ஸ்திரமான ஆட்சியொன்று இலங்கையில் நிலவும் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு.  அதன் காரணமாகவே புதுடில்லியுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணிய ரணில் விக்ரமசிங்க போன்றவர்களைவிட அநுரவுக்கு மிகப்பெரிய வரவேற்பை டில்லி வழங்கியுள்ளது.

ஆனால், ஜனாதிபதி அநுர, இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, சீனாவின் அதிகமான முதலீடுகளை ஈர்த்து இருநாடுகளுடனும் சமதளத்தில் இராஜதந்திர உறவை கட்டியெழுப்ப விரும்புகிறார். அதன் காரணமாகவே இந்திய பயணத்தை தொடர்ந்து அவர் பீஜிங் செல்கிறார். இது சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை என இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டில்லி, பீஜிங்கை எவ்வாறு கையாள போகிறார் அநுர?

சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுமுறைக்கு தேவையற்ற தடைகளை ஏற்படுத்த கூடாதென்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருப்பதுடன், இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் பலமாக்கிக்கொள்ளும் வகையில் செயல்படுகளை முன்னெடுத்துள்ளது. வழமையாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வரும் போது டில்லியிலிருந்து செய்தியொன்று வெளியாகும். ஆனால், கடந்தவாரம் சீன கப்பலொன்று கொழும்புக்கு வந்தது. அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவே நேரில் சென்று வரவேற்றார். ஆனால், டில்லியில் இருந்து வெளியாகும் வழமையான கவலை செய்தி வெளியாகவில்லை. இது இந்தியாவின் இராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தில் (BRI) தெற்காசியாவில் சிறிய நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதனை முறியடித்து தெற்காசியாவில் பலமான நாடாக உருவெடுப்பதற்கான திட்டங்களை புதுடில்லி வகுத்துள்ளது. அதனை அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என இந்தியா கூறுகிறது.

அதன் ஒருகட்டமாக இந்திய பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு வரும் உறுதிமொழியை வழங்கியுள்ளார். அவரது விஜயம் இலங்கையுடனான உறவை மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கு நகர்த்தும் என இந்திய நம்புகிறது. புதுடில்லி – கொழும்புக்கான உறவு அநுரவின் ஆட்சியில் எப்படி இருக்க போகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய போட்டிகளை எவ்வாறு அநுர சமாளிக்க போகிறார்?. சோஷலிச கொள்கையின் வழித்தோன்றலாக தேசிய மக்கள் சக்தியும் அதனை தலைமை தாங்கும் அநுரவும் இந்தியா மற்றும் சீனாவை எவ்வாறு கையாள போகிறார் என்பதை சர்வதேசம் உற்று நோக்க ஆரம்பித்துள்ளது.

கட்டுரை – சுப்ரமணியம் நிஷாந்தன்

The post தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? appeared first on Oruvan.com.

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, விஜித ஹேரத் உள்ளிட்டவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

நேற்றிரவு 10:00 மணியளவில், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயமாக இதுவாகும்.

இந்த வியஜத்தின் போது, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியால் அரச மரியாதையுடன் வரவேற்று, பின்னர் நட்பு ரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.

பொருளாதார உடன்படிக்கையாக கருதப்படும் எட்கா உடன்படிக்கைக்கு ஜனாதிபதியும் பிரதமர் மோடியுடன் இணக்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மேலதிகமாக இந்திய ஜனாதிபதி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய நிதியமைச்சர் மற்றும் இந்திய வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தித்திருந்தனர்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க appeared first on Oruvan.com.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.

மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தமைக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் இது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். ஜனாதிபதியாக, உங்கள் முதல் அரசு முறைப் பயணத்திற்கு நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த பயணத்துடன், எங்கள் உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாக்கப்படுகின்றன. எங்கள் கூட்டாண்மைக்காக, நாங்கள் ஒரு எதிர்கால தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

“எங்கள் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை வலியுறுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், “பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கியமான தளம் என்று நம்புவதாகவும்” பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிந்தார்.

கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அவர் மேலும் வலியுறுத்தினார்.

“இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்களின் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார அழைப்பு விடுத்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

“இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கை நிலப்பரப்பை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு பிற்பகல் நடைபெற உள்ளது.

The post ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு appeared first on Oruvan.com.

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.

அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது.

இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார்.

பேசுபொருளாகுமா கச்சத்தீவு

பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது.

பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மோடி கூறப்போகும் செய்தி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது.

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு

இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரமணியம் நிஷாந்தன்

The post அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? appeared first on Oruvan.com.