announces Archives - Oruvan.com

கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்
தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்து கொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 02 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

The post கரூர் சம்பவம் –  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய் appeared first on Oruvan.com.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பதவி விலக தீர்மானம்
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.

எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை.

கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்துகள் எழுந்தன. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது.

மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 03 சீட்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பதவி விலக தீர்மானம் appeared first on Oruvan.com.

அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு
அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக நாளை முதல் அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, ஒகஸ்ட் மாதத் தொடக்​கத்​தில் இந்​தி​யா​வுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது.

இதுத​விர, தற்​போது தபால் சேவைக்​கான சுங்க கட்​ட​ணத்​தி​லும் அமெரிக்கா மாற்​றம் மேற்கொண்டுள்ளது.

அதாவது இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாடு​களுக்கு செல்​லும் பொதிகளுக்கு இது​வரை விலக்கு அளிக்​கப்​பட்டு வந்​தது. தற்​போது சுங்​கக்​கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய நிலை உரு​வாகி உள்​ளது.

அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரிவ​ிதிப்பு காரண​மாக இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்கு தபால்​களை எடுத்​துச் செல்​வ​தில் கட்​ட​ணக் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

எந்த அளவுக்கு கட்​ட​ணங்​களை அறிவிடுவது என்​ப​தில் ஏற்​பட்​டுள்ள குழப்​பம் காரணமாக தபால்​களை ஏற்க அமெரிக்கா​வுக்கு விமானங்​களை

இயக்​கும் விமான நிறு​வனங்​கள் மறுத்து வரு​கின்​றன.

இதனையடுத்து ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவை​களை தற்​காலிக​மாக இந்​தியா நிறுத்​தி​யுள்​ளது.

மேலும் 800 அமெரிக்க டொலர் வரை மதிப்​புள்ள பொருட்​களுக்கு இது​வரை வரி விலக்கு அளிக்​கப்​பட்ட நிலை​யில் தற்போது ரத்து செய்யப்படுவதாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா​வுக்கு அனுப்​பப்​படும் அனைத்து சர்​வ​தேச அஞ்​சல் பொருள்​களும் அவற்​றின் மதிப்​பைப் பொருட்​படுத்​தாமல் சர்​வ​தேச அவசர பொருளா​தார ஆற்​றல் சட்​டத்​தின்​படி சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 100 அமெரிக்க டொலர் வரை​யுள்ள பரிசுப் ​பொருள்​களுக்கு மட்​டும் வரி​விலக்கு அளிக்​கப்​படும். ஏனை பொருட்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்​சல் அனுப்ப வேண்​டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடிதங்​கள், ஆவணங்​கள் மற்​றும் சுமார் 9,000 ரூபா (100 டாலர்) மதிப்​புள்ள பரிசுப் பொருட்​களைத் தவிர்த்​து, இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்​கான அனைத்து வகை​யான பார்​சல்​களும் நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றன.

ஏற்​கனவே பொதிகளை அனுப்ப பதிவு செய்​தவர்​கள், தபால் கட்​ட​ணத்தை திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்​கை​யாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த சிரமம் தொடர்பில் தபால் துறை கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா​வுக்​கான முழு சேவை​களை​யும் விரை​வில் மீண்​டும் தொடங்க அனைத்து சாத்​தி​ய​மான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும் எனவும் தெரிவிக்​கப் பட்​டுள்​ளது.

இதேவேளை, ஆஸ்​திரி​யா, பிரான்​ஸ், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்கா​வுக்​கான தபால் பொதி சேவையை தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாகத்​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

The post அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு appeared first on Oruvan.com.

‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த மாதம் 21ஆம் திகதி ராஜி​னாமா செய்​தார்.

இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம்,

போட்டி இருந்தால், அடுத்த மாதம் 09 ஆம் திகதி வாக்குப்பதிவு நடை​பெறும் என்று அறி​வித்​துள்​ளது.

The post ‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர்,

ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களிடம்

கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

The post பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு
ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆபரேசன் சிந்தூர் செயற்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் நேற்று மாலை 05 மணிக்கு அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 08 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டது.

பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் மேற்கொள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்  மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

The post ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு appeared first on Oruvan.com.

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் அண்மையில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

“இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை செய்தித்தொடர்பாளர்

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தப் பின்னணியில்போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு appeared first on Oruvan.com.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்
அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குவர்.

The post அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம் appeared first on Oruvan.com.