announcement Archives - Oruvan.com

அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்துச் சேவைகளும் வழமை போன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post அடையாள அட்டை பெற்றுக்கொள்வோருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை அறிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு appeared first on Oruvan.com.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய

எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

The post லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதியன்று ராஜகிரியவில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை இரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை நவம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய தீர்மானிக்கப்படுமாயின் அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

The post உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75% ஆக தொடர்ந்தும் பேணப்படும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்றும் நாணயக் கொள்கை சபை கருதுகிறது.

The post கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு appeared first on Oruvan.com.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

The post க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் தனது முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், நெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, தேசிய கல்வி நிறுவனம் (NIE) பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டத்தில் முதல் தர ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சியாளர்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த பின்னர், பயிற்சித் திட்டம் மாகாண மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆறாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்களுக்கு இணங்க, கல்வி வெளியீட்டுத் துறை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புதிய பாட அலகுகளை (தொகுதிகள்) அச்சிடுவதையும் ஆரம்பித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாரம்பரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The post ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.