amshi Archives - Oruvan.com

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபருக்கு இடமாற்றம்
கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பாடசாலைக்கு தற்போது புதிய அதிபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குறித்த பாடசாலையில் மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் அதிபர் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன், தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பாடசாலைக்கு முன்பாக பெரும் போராட்டம் முன்னெக்கப்பட்டிருந்தது.

தற்போது மாணவியின் மரணம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணைகள் மீளவும் ஜூன் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன், தொடர்புடைய ஆசிரியரும் இப்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபருக்கு இடமாற்றம் appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – ஜூன் 23 மீண்டும் விசாரணை
கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஜூன் மாதம் 23 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடபெறும் என்றும், மேலதிக நீதிபதி பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி நீதிமன்றம் முன்பாக அமைதிப்  போராட்டம் ஒன்றும் இன்று காலை இடம்பெற்றது.

குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டாம் எனவும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக குரல் எழுப்பினர்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய பணிப்பாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சிவில் சமூக பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. உயிரிழந்த மாணவியின் சார்பில் பிரபலமான நான்கு சட்டத்தரணிகள் முன்லையாகியிருந்தனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் இருந்து கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி குறித்த மாணவி குதித்துத் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – ஜூன் 23 மீண்டும் விசாரணை appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் – ஆசிரியருக்கு இடமாற்றம் – பணி நீக்கத்துக்கும் உத்தரவு?
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது, குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உட்பட பொது மக்கள் இணைந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி, பாடசாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த ஆசிரியரை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் – ஆசிரியருக்கு இடமாற்றம் – பணி நீக்கத்துக்கும் உத்தரவு? appeared first on Oruvan.com.