Amendment Archives - Oruvan.com

மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார்

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை பேரவைக்கு பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கு இதன் ஏற்பாடுகள் இடமளிக்கும்.

மொத்த விற்பனை மின்சாரச் சந்தை என்பது தேசிய மின்சாரச் சந்தை என மாற்றப்படுவதுடன் வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுதல், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

The post மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர் appeared first on Oruvan.com.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அடுத்த மாதம்
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக அடுத்த மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் டொக்டர் ஜனக சேனாரத்ன தலைமையில் நேற்று(27) கூடியமை குறிப்பிடத்தக்கது.

The post தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அடுத்த மாதம் appeared first on Oruvan.com.

நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு தொடர்புடையது.

இந்த முன்மொழிவை வேளாண்மை மற்றும் கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டம் இயற்றப்பட்டு 54 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அது காலாவதியான சட்டமாகவே செயற்படுத்தப்படுகிறது என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் –  இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவரைஞர் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்,பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம்

எடுக்கப்பட்டது. அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரத்துச் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த திருத்தங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்ததன் பின்னர், எதிர்வரும் வாரங்களில்

நாடாமன்றத்திலும் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக சேர்க்கப்பட்ட 10 இலட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான

சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும் வேட்புமனுவை இரத்து செய்வதற்கான முக்கிய காரணியாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக

தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் appeared first on Oruvan.com.