ambalangoda Archives - Oruvan.com

உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் புறக்கணித்து, தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

அதன்படி, பொலிஸார் லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்றனர். வாகனம் தொடர்ந்து பயணித்த நிலையில், பொலிஸார லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது, லொறிக்குள் 10 கால்நடைகள் மற்றும் நான்கு எருமைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில், இரண்டு சந்தேக நபர்கள் 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அக்குரெஸ்ஸ மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதியும் மற்றொரு சந்தேக நபரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
அம்பலாங்கொட, கலகொட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடொன்றில் நடைபெற்ற ஒரு விருந்துபசாரத்தின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரெனத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு ‘பிஸ்டல்’ ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
அம்பலாங்கொடையில் உள்ள  வணிக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தங்குமிடத்தை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

காலியில் அம்பலாங்கொடை நகரத்தில் திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 47 வயதான ஸ்ரீரன் கோசல டி சில்வா  என்பவர் உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போது கைத்துப்பாக்கி இயங்காமையினால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இலக்கு வைக்கப்பட்ட நபர் துப்பாக்கிதாரியை துரத்திச் சென்றுள்ளார்.

இருப்பினும், மிகக் குறுகிய நேரத்தில் வேறொரு துப்பாக்கியுடன் மீண்டும் வந்த துப்பாக்கிதாரி, கோசல டி சில்வா நோக்கிச் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்த நிலையில், மோட்டார் சைக்களில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது appeared first on Oruvan.com.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது.

அம்பலாங்கொடை நகரில்  தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார், இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலை போட்டி குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஏற்பட்டிருக்கலாம் என்று  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு appeared first on Oruvan.com.

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

அம்பலாங்கொடை மீன் வியாபாரி கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது
அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை, போரம்ப பகுதியைச் சேர்ந்த 54 வயது மீன் வியாபாரி, அம்பலாங்கொடை நகராட்சி மன்ற நூலகத்திற்கு முன்பாக கடந்த நான்காம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

சிவப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும், கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையாளிகளுக்கு காரை வழங்கிய நபர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சந்தேக நபர் கொஸ்கொடையில் இருந்தும், மற்ற சந்தேக நபர் வதுகெடாவில் இருந்தும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post அம்பலாங்கொடை மீன் வியாபாரி கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது appeared first on Oruvan.com.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டது
அம்பலாங்கொடை நகரசபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஹுங்கல்ல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கரந்தெனிய எகொடவெல சந்திப்பில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அம்பலாங்கொடை நகரசபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை குறிவைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்த நபர், சிகிச்சைக்காக பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகம் மற்றும் மார்பில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, போரம்ப பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பலாங்கொட நகர சபைக்கான போட்டியில் அந்த நபர் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ‘கரந்தெனிய சுத்தா’ என்ற குற்றவாளியின் மைத்துனர் என்றும் பொலிஸார்

தெரிவித்தனர்.

இந்த கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

தென் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

The post அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு
மாதம்பே, தேவகொட பிரதான வீதியின் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் பேரில், குழந்தை சாலையோரத்தில் அழுது கொண்டிருந்ததை கண்டு மீட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸாரின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரேணுகா உட்பட ஒரு பெண் பொலிஸர் குழு, பிரதான சாலையில் இருந்து குழந்தையை மீட்டு பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலபிட்டிய ஆதார மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தையின் தாயார் தொடர்பான விசாரணைகள் இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

The post சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு appeared first on Oruvan.com.