Allegations Archives - Oruvan.com

ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த மைத்திரி
அநுராதபுரம் எப்பாவெல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவரினால் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன

முறைப்பாடு தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனவும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த மைத்திரி appeared first on Oruvan.com.

நெல் கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜனாதிபதி!
பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் நெல் கையிருப்பை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அது பொய் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டினுள் வருடாந்த அரிசித் தேவை மற்றும் நெல் உற்பத்தி தொடர்பில் அரசாங்க தரவுகளில் கடுமையான திரிபு காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, இம்முறை அரிசி இறக்குமதியில் சிக்கலான ஒரு நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு பருவத்திலிருந்து அடுத்த பருவத்திற்கு சேகரிக்கும் இருப்புக்களை முறையாக சந்தைக்கு வெளியிடுகிறார்கள் எனவும் அவர்களின் அரிசி ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அவ்வாறான அரிசி அல்லது நெல் கையிருப்புகள் மறைக்கப்பட்டிருந்தமை வெளிப்படவில்லை.

பிரதான ஊடகமொன்றின் அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பருவத்திலிருந்து அரிசிக்கான அதிகபட்ச விலை அதே அளவில் பராமரிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்றும், அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்க எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அந்த கட்டுப்பாட்டு விலையில் விற்கக்கூடிய விலையில் நெல் வாங்குமாறு ஆலை உரிமையாக்ளர்களுகு அறிவிக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கப் பதிவு இல்லாமல் நெல் இருப்பு வைப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

The post நெல் கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜனாதிபதி! appeared first on Oruvan.com.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு – ரணில் பதிலடி!
கடந்த அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை  இன்று (09) வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒன்பது மாத காலப்பகுதியில் மதுபான உரிமங்களால் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

மேலும் குறித்த அறிக்கையில்,

“சுதந்திரத்திற்கு பின்னர் 2022ஆம் ஆண்டு வரையில் மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போது அரசாங்கம் கட்டணம் அறவிட்டிருக்கவில்லை. அப்போது நாட்டில் நேரடியாக வரியை இழக்கும் போக்கு காணப்பட்டது.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபட சரியான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைக் குழு அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்தது. அதன்காரணமாக, உடனடி நேரடி வரி இழப்புக்கு மாற்றாக அரசாங்க வருவாயை அதிகரிக்கவும், பணத்தை வசூலிக்கவும் மதுபான உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த உரிமங்கள் அனைத்தும் கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி வழங்கப்பட்டதாகவும், உரிமம் வழங்கும் போது கலால் ஆணையாளர் நாயகம் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டும் கலால் உரிமம் வழங்கப்பட்டதாகவும் இந்த வழிமுறைக்கு அப்பால் ஒரு கலால் உரிமம் கூட வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட இந்த மதுபான உரிமம் வழங்கும் நடைமுறையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தற்போதைய வெளிப்படையான மற்றும் முறையான புதிய வருமான ஆதாரத்தை ஒழிக்கலாமா வேண்டாமா, இல்லை என்றால் புதிய கலால் சட்டத்தை சமர்பிப்பதா என்பதை அமைச்சர்கள் குழு முடிவு செய்ய வேண்டும். மேலும், இதை தொடர அல்லது இரத்து செய்ய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

The post மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு – ரணில் பதிலடி! appeared first on Oruvan.com.