Air India Archives - Oruvan.com

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் – இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை
அகமதாபாத் விமான விபத்தில் எரிபொருள் சுவிட்சை விமானி வேண்டுமென்றே அணைத்துவிட்டதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது.

இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என தெரிவித்து வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.

அதில்,’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இரண்டு விமானிகள் பேசிய விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலதரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதாவது, இந்த விபத்துக்குக் காரணமாக விமானி இருந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு விமான வல்லுநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.

இந்த நிலையில், ‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானி அறை குரல் பதிவாளரை ஆய்வு செய்ததில் இருந்து இது தெளிவாகிறது என்றும் செய்தித்தாள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், ஜூன் 12 திகதி அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 242 பேரில் 241 பேர் கொல்லப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு வணிக சேவையில் நுழைந்ததிலிருந்து போயிங் 787 சம்பந்தப்பட்ட முதல் உயிரிழப்பு விபத்து இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் – இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை appeared first on Oruvan.com.

கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெறுள்ளது. ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியுள்ளது.

விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது பறவை மோதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது . அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் கொழும்புக்குத் திரும்புவது குறித்து விமான அதிகாரிகள் கவலை தெரிவித்தனர் .

பயணிகள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மாற்று விமானத்தில் 137 பயணிகள் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பறவை மோதியதால் விமானத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும், மேலும் ஆய்வுக்குப் பிறகுதான் இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, அமிர்தசரஸிலிருந்து பிரித்தானியாவின் பர்மிங்காமுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் எலி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு appeared first on Oruvan.com.

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின்னர் விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

காலை 9.07 மணியளவில் கோழிக்கோட்டில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், கேபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 11.12 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது.

“விமானத்தின் கேபின் ஏசியில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தமையின் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக” விமான நிலைய அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார்.

விமானம் திரும்பியவுடன் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விமான நிறுவனம், சிக்கலை சரிசெய்ய அல்லது மாற்று விமானத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் “முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும்” மதியம் 1.30 மணிக்குள் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“அதுவரை நேரமும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததான,” செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது appeared first on Oruvan.com.

தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்து விலகி செப்பனிடப்படாத பகுதிக்குள் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதிலும் விமான நிறுத்துமிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.

ஓடுபாதையில் இறங்கும்போது விமானத்தின் மூன்று சில்லுகளும் (டயர்கள்) வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, இரண்டாம் நிலை ஓடுபாதை செயல்படுத்தப்பட்டுள்ளது,” என்று மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தரையிறங்கிய பின்னர் ஏர் இந்திய விமானம் ஓடுபாதையில் இருந்து 16 முதல் 17 மீட்டர் தூரம் விலகிச் சென்றது, ஆனால் பாதுகாப்பாகத் திரும்பி விமான நிறுத்துமிடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 9.27 மணிக்கு கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் AI-2744 தரையிறங்கியபோது இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு விமான நிலையத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு appeared first on Oruvan.com.

ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆனதாக விசாரணை அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு ஸ்விட்சுகளும் அணைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு ஸ்விட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிது நேரத்திலேயே ஸ்விட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.

“எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஸ்விட்சை ஏன் அணைத்தீர்கள்” என்று ஒரு விமானி கேட்பதும், அதற்கு மற்ற விமானி, தாம் அவ்வாறு செய்யவில்லை’ எனப் பதிலளிப்பதும் அதில் பதிவாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விமானி வேண்டும் என்றே ஸ்விட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் என்று இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் என்.டி.டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “எரிபொருள் தேர்விகள் சறுக்கும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இதைத் தானாகவோ அல்லது மின் தடையினாலோ செய்ய முடியாது.

அவை ஒரு ஸ்லாட்டில் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றை மேலே அல்லது கீழே நகர்த்த நீங்கள் அவற்றை வெளியே இழுக்க வேண்டும்.

எனவே, கவனக்குறைவாக அவற்றை ’ஆஃப்’ நிலைக்கு நகர்த்துவதற்கான வாய்ப்பு எழாது.

அதை ‘ஆஃப்’ நிலைக்கு நகர்த்துவது நிச்சயமாக வேண்டுமென்றே கைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

புறப்படும் இடத்தில், சுழற்சி தொடங்கும்போது, இரண்டு ஸ்விட்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ‘ஆஃப்’ நிலைக்கு நகர்த்தப்படுவது ஏன் என்பதை வேறு எதுவும் விளக்கவில்லை. ஆகையால், இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

காக்பிட் குரல் ரெக்கார்டரின் கூற்றுப்படி, ஒரு விமானி, ‘நீங்கள் அதை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்கிறார். ’நான் அதைச் செய்யவில்லை’ என்று மற்றொரு விமானி பதிலளித்தார். இங்குதான் அறிக்கை சில முரண்பாடுகளைக் காட்டுகிறது, இது, கிட்டத்தட்ட ஒரு மறைப்பு போல தெரிகிறது.

புறப்படும் மற்றும் தரையிறங்கும்போது அனைத்து விமானிகளும் ஹெட்போன்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

காக்பிட் பகுதி மைக்ரோபோனின் அடிப்படையில் ஆடியோ CAM 1 (கேப்டன்) அல்லது CAM 2 (இணை விமானி )லிருந்து வருகிறதா என்பதை காக்பிட் குரல் ரெக்கார்டர் தெளிவாகக் காட்டும்.

எனவே, ‘ஒரு விமானி இதைச் சொன்னார், ஒரு விமானி அதைச் சொன்னார்’ போன்ற தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் மோசமான அறிக்கையிடல் ஆகும்.

சுழற்சியின்போது விமானியின் இரு கைகளும் கட்டுப்பாட்டு நெடுவரிசையில் இருக்கும், ஏனெனில் அது தானியங்கி அல்ல. அவர்கள் விமானத்தை சுழற்றுவதிலும், தன்னியக்க பைலட்டை அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள், எனவே இரண்டு கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், விமானியின் கண்காணிப்பு மட்டுமே கைகள் சுதந்திரமாக உள்ளது. வேறுவிதமாகக் கூற தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துவது தவறாக வழிநடத்துவதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்பட்டது.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருக்கும்போது, இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கலாம். கடந்தகால சம்பவங்களைக் சுட்டிக்காட்டியே நான் இதைச் சொல்கிறேன்.

இது விமான நிறுவனத்தின் தவறு மட்டுமல்ல; அது விமானக் கட்டுப்பாட்டாளரின் பொறுப்பாகும். ஒரு முக்கிய பிரச்சினை விமான நேர வரம்புகள் மற்றும் ஓய்வு நேரங்கள்.

கடந்த 10-15 ஆண்டுகளில், விமானிகள் தங்கள் வரம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர், இதனால் அவர்களுக்கு சிறிய குடும்ப வாழ்க்கையே மிஞ்சியுள்ளது.

பல குடும்பங்கள் பிரிந்து செல்வதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், மேலும் இந்த வகையான மன அழுத்தம் பல்வேறு எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் உள்ள எந்த விமான நிறுவனமும் மருத்துவ மதிப்பீடுகளின்போது அதன் விமானிகளின் மனநல சுயவிவரத்தைப் பராமரிப்பதில்லை. நம்மில் சிலர் இதைப் பற்றி எச்சரித்து வருகிறோம், ஆனால் அது செவிடர் காதுகளில் விழும் சங்காகவே இருக்கிறது.

விமானிகளைம் மனிதர்களைவிட இயந்திரங்களைப்போலவே நடத்துகிறார்கள். எனினும், இதுபற்றி நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது. உலகிலேயே மிக அற்புதமான விமானிகள் மற்றும் பணியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.

நாட்டின் விமானிகள் மற்றும் பணியாளர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நான் பாராட்ட வேண்டும்; அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் முதுகெலும்பு. அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் முதன்மையானவர்கள்.

விமானிகளின் நலன் மற்றும் நல்வாழ்விலும் நாம் அக்கறை கொள்கிறோம். எனவே இந்த கட்டத்தில் எந்த முடிவுகளுக்கும் விரைந்து செல்லாமல் இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்போம்.

இதில் தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம். ஆனால் முதற்கட்ட அறிக்கைதான் வந்துள்ளது. உறுதியான அறிக்கை ஒன்று வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா? appeared first on Oruvan.com.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஏர் இந்தியா
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 04 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் கத்தார் உட்பட சில மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. எனவே அப்பகுதியில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி வழியாகவே பயணிக்கின்றன. இந்த நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகள், அமெரிக்க நகரங்களான நியூயார்க், நேவார்க், சிகாகோ மற்றும் வாஷிங்டன் ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கான சேவைகள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவை ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் துபாய், தோஹா, பஹ்ரைன், தமாம், அபுதாபி, குவைத், ராஸ் அல்-கைமா மற்றும் திபிலிசி ஆகிய நாடுகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஏர் இந்தியா appeared first on Oruvan.com.

ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது
அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் – அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இந்த விபத்தில் சிக்கியது.

198 பேரில் 149 பேர் இந்தியர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், 32 பேர் பிரித்தானியர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.

உயிரிழந்த 15 பேரின் உடல்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், 183 உடல்கள் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 214 பேர் டி.என்.ஏ மாதிரிகள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் எட்டுப் பேர் டி.என்.ஏ பொருத்தம் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்.

The post ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது appeared first on Oruvan.com.

நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த விமானத்தை பத்திரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று பயணித்துள்ளது.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் இரண்டு” எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி உணர்ந்தார்.

தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் ஐந்து மணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமாம் விபத்துக்குள்ளானத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் appeared first on Oruvan.com.

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்ட தேடலுக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கவில்லை என தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

The post ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம் appeared first on Oruvan.com.