agreement Archives - Oruvan.com

நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்

மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, தீவகத்தில் உள்ள மின்பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் ஏழு மணிநேரம் எடுப்பதாக தெரிவித்த அமைச்சர், புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயற்படத் தொடங்கியவுடன், 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்கும் என தெரிவித்தார்.

The post நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல்
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் குறிப்பிட்ட அளவிலான படையினர் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள சிரிய தூதரகம் இதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன்போது, ட்ரூஸ் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் என 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

The post இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல் appeared first on Oruvan.com.

அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானத்தில், இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவை பின்வருமாறு,

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

The post அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் appeared first on Oruvan.com.