Afghanistan Archives - Oruvan.com

பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில்

நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், காபூலும் நங்கர்ஹார் மாகாணத்திலும் உள்ள இராணுவ இலக்குகளை மட்டுமே தங்களது படைகள் இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

The post பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை நடத்தியது. பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு இராணுவ ஸ்டேஷன்கள் ஆப்கன் வசமாகியுள்ளன. அத்துடன், பல வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தான், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.

தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இதுவே இருநாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்க காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தானின் கடைசி திரையரங்கமும் இடிக்கப்பட்டது!
ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் கலாச்சார முகமாக இருந்த கடைசி திரையரங்கம், ஒரு ஷாப்பிங் மாலுக்கு வழிவகுக்க இடிக்கப்படுகிறது.

1960களில் இருந்து பல்வேறு ஆட்சிகளின் போதும், நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு தாலிபான் ஆட்சிகளின் போதும் காபூலின் கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்த திரையரங்கை இடித்து வருகின்றனர்.

இந்த திரையரங்கம் 2021 முதல் பிரச்சாரத் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக மட்டுமே செயல்பட்டு வந்தது.

இருப்பினும், பொருளாதார ஆதாயத்திற்காக நிலத்தைப் பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தலிபான் அரசாங்கம் திரையரங்கை இடித்துத் தள்ளினர்.

இங்கு ஒரு புதிய எட்டு மாடி ஷாப்பிங் மால் கட்டப்படவுள்ளது.

1960 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம், பாலிவுட் படங்களைத் திரையிடுவதற்கான ஒரு பிரபலமான இடமாக இருந்தது. அந்த நேரத்தில், காபூல் மத்திய ஆசியாவின் பாரிஸ் என்று அழைக்கப்பட்டது.

3.5 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படும் இந்த ஷாப்பிங் மாலில் 300 கடைகள் இருக்கும் என்றும், உணவகங்கள் மற்றும் ஒரு மசூதி இருக்கும் என்றும் காபூல் நகராட்சி அறிவித்துள்ளது.

தற்போதைய வெளிநாட்டுத் தடைகள் காரணமாக, நாடு மற்ற நாடுகளிடமிருந்து நிதி உதவி அல்லது முதலீடுகளைப் பெறவில்லை. எனவே, தாலிபான்கள் இப்போது வணிகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிலத்தை வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில், நாட்டை விட்டு வெளியேறிய பலர் திரும்பி வருவதால், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், சினிமா அரங்கில் உள்ள உபகரணங்கள் அழிக்கப்படாது. பின்னர் பயன்படுத்துவதற்காக அதை வைத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், சினிமா அரங்கம் இல்லாததால் கட்டிடம் பயன்படுத்த முடியாததாகிவிடாமல் தடுக்கவே புதிய மால் கட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் தேசிய சேனல்கள் வெளிநாட்டு தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளன. யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவேற்றுவதும் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஆப்கானிஸ்தானின் கடைசி திரையரங்கமும் இடிக்கப்பட்டது! appeared first on Oruvan.com.

13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது.

80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த காணொளி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தண்டனையை நிறைவேற்றியவரின் குடும்பத்தினரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

தாலிபான் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டதுடன், ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தாலிபான் உச்சத் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளித்திருந்தார்.

பின்னர் 13 வயது சிறுவனிடம் குற்றவாளியை மன்னிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது, அதற்கு சிறுவன் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிகாரிகள் மரணதண்டனையை நேரில் காண பொது மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மரணதண்டனையைக் காண சுமார் 80,000 பேர் கொண்ட கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அதிகாரிகள் 13 வயது சிறுவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து மரணதண்டனையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினர். சிறுவன் பொது மக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் கொடூரமான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 80,000 பேர் நிறைந்த ஒரு பொது இடத்தில், துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம் appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 09 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

The post ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.

குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாக முதற் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்தனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு
கிழக்கு ஆப்கானிஸ்தானில்  பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீற்றர் தொலைவில், 08 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் மற்றொரு நிலஅதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இயற்கை அனர்த்தத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்குண்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வு –  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி

கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

The post ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு
ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு இனை்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

170 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதுடன் பொருள் சேதம் குறித்தும் இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

The post ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு appeared first on Oruvan.com.