adjourned Archives - Oruvan.com

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றியதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர்.

மேலதிக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

The post ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

உதய கம்மன்பிலவின் மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும், உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது .

The post உதய கம்மன்பிலவின் மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு appeared first on Oruvan.com.

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

​​இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அரசு தரப்பு சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கு தொடர்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களைத் தாண்டி பிரதிவாதி பல ஆவணங்களைக் கோரியுள்ளதாகக் கூறினார்.

அந்த ஆவணங்களை வழங்க காலவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த வழக்கின் முதல் சாட்சியின் முழுமையான வாக்குமூலம் தேவை என்றும் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல் 3.30 இற்கு நடைபெற்ற நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, இந்த விவாதத்திற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபையில் முன்வைத்திருந்தார், ஆனால் இன்று (18) பிரேரணை விவாதிக்கப்பட்டபோது அவர் நாடாளுமன்றில் இல்லை.

இதனால் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத காரணத்தினால் நாளை (19) காலை 9.30 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.

The post நாடாளுமன்றம் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.