Actor Vishal Archives - Oruvan.com

எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்
பிரபல நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதாரத்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் அவர்களின் நிச்சயதாரத்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது அவரது 35வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஓகஸ்டு 29ஆம் திகதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தனது திருமணம் என்று உறுதியாக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர்.

சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ‘ஆகஸ்ட் 29ஆம் திகதி நல்ல தகவலை சொல்லுவேன்’ என்று விஷால் பதில் அளித்து இருந்தார்.

அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த விழாவில் தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. விஷால் – சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

The post எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் appeared first on Oruvan.com.

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாவை கடனாக பெற்றிருந்தார்.

இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதாவது, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிட்டதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இதன்படி, லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாவை வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

இதன்படி, 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.

மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர், விஷால். இவர், கடந்த சில நாட்களாகவே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் முன்பு இருந்தது போல் இல்லாமல் சோர்வுடன் காணப்படுகிறார்.

அப்படித்தான், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் மயங்கி விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடல் நிலை சரியில்லாத விஷால்?

20 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருபவர், விஷால். திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.ரெட்டியின் மகனான இவர், ஆரம்பத்தில் சில படங்களில் துணை இயக்குநராக வேலை பார்த்தார்.

பின்பு, செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு கொஞ்சம் தள்ளியிருக்க ஆரம்பித்தார்.

விஷால், 12 வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நிதிப்பிரச்சனை காரணமாக வெளிவராமல் இருந்தது. அந்த பிரச்சனைகள் தீர்ந்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்த படத்தின் விழாவில் கை நடுக்கத்துடன் விஷால் பேசியது, ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

அவ்விழாவிற்கு அவர் அதிக காய்ச்சலுடன் வந்திருப்பதால், அவருக்கு கை உதறியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தான் பங்கேற்று வந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் தான் நலமுடன் இருப்பதாகவே கூறினார்.

மயங்கி விழுந்தார்…

விஷால், சினிமாவை தாண்டி பல சமூக நலப்பணிகளையும் செய்து வருகிறார். வறுமை கோட்டில் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பு செலவுக்காக உதவுவது, விவசாயிகளுக்கு பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்.

இது சம்பந்தமாக நடக்கும் விழாக்களிலும் கலந்து கொள்வார். அப்படி, கூவாகத்தில் மிஸ் திருநங்கை 2025 போட்டி நடைப்பெற்றது. இந்த விழாவில் நேற்று விஷால் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.

இதில் தமிழ்நாடு மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், சிரித்து பேசிக்கொண்டிருந்த விஷால் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

விஷால் மயக்கமடைந்ததை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

அவ்விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரை உடனிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ சிகிச்சிக்கு பிறகு, விஷால் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னர் போல் இல்லை..

கோலிவுட்டில் அனைத்து நடிகர்களும் ஃபிட் ஆக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும்தான் உடற்கட்டுடன் இருப்பர். அப்படி, தனது உடலை மிடுக்காக வைத்திருந்தவர் விஷால். ஆனால், எந்த காரணத்தாலோ அவரது பேச்சிலும் நடையிலும் கடந்த சில வருடங்களாக தடுமாற்றம் தெரிகிறது.

முன்னர் வெளிவந்த படங்களில் அனைவரையும் பரந்து பரந்து அடித்து-சண்டை போட்ட அவர், இப்போது அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லை. இதனால், இவரது நிலை குறித்து ரசிகர்கள் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர்.

ZeeNews Tamil

The post மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால் appeared first on Oruvan.com.