Actor Manoj cremated Archives - Oruvan.com

நடிகர் மனோஜின் உடல் தகனம்
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது.

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மகனின் பிரிவால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரின் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்தனர்.

இறுதிச்சடங்கில் பாக்கியராஜ், வைரமுத்து, சீமான், இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) காலமானார்.

அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டில் உள்ள அவரின் இல்லத்தில் உயிர் பிரிந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக மனோஜ் உடல் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் பாக்கியராஜ், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post நடிகர் மனோஜின் உடல் தகனம் appeared first on Oruvan.com.