Action Archives - Oruvan.com

சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு சரியான முறைமையின்றி அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

குறித்த நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

The post சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

அமைதி காலத்தில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதன்படி, இன்று முதல் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனிடையே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதி காலத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில் அவை அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000 இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

The post அமைதி காலத்தில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பிரகாரம் குறித்த சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளைக் காட்சிப்படுத்தாமை நுகர்வோரை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் சுமார் 25 சில்லறை வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்கு புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பிற்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 076 6412029 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தப் பிரச்சினைகளை தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பி, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொடர் செயன்முறை மூலம் விசாரணைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை,எண்ணுக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

The post சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை appeared first on Oruvan.com.

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!
கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தமிழ்ப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த அறிவிப்பில்,

“கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நேற்று (22) இறந்துள்ளார்.

மருதானை பொலிஸார் இந்த மரணத்தை உயிர்மாய்ப்பு என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இந்த மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

காலங் காலமாக இலங்கையில் பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ள நிலையில், இந்தப் பொலிஸ் நிலைய மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்! appeared first on Oruvan.com.

மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை
“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்ட அவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.

இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள். அதனை சரியான முறையில் முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மன்னாரில் இடம்பெற்ற நில மோசடி தொடர்பில் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அதனை எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும்.

சிங்கள தமிழ் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள். அதனை விட நாட்டின் பிரச்சினைகளை சுலபமாகத் தீர்த்து வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு தேவை.” என்றார்.

The post மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை appeared first on Oruvan.com.