#accident Archives - Oruvan.com

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

The post இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி appeared first on Oruvan.com.

ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக முச்சக்கர வண்டி ஒன்று வீதிக்குள் நுழைய முற்பட்டது.

இதன்போது, முச்சக்கர வண்டி மீது மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம் appeared first on Oruvan.com.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமமைந்துள்ளார்.

கொட்டகலை, சென்கிளையர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை

நோக்கி சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து appeared first on Oruvan.com.

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 263 சாலை விபத்துகளில் 276 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 27 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பதிவான உயிரிழந்தவர்களில் 32 வீதம் பேர் பாதசாரிகள் என்றும், 36 வீதம் பேர் அல்லது 98 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களில் பின்னால் இருப்பவர்கள் 17 பேரும், 18 பேர் மிதி வண்டி ஓட்டுநர்களும், 25 சாரதிகளும், 27 பேர் பயணிகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 15,068 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில், 2,242 விபத்துகள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 2,363 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில், 2,452 விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 2,557 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், 2,420 விபத்துகள் காரணமாக 2,540 பேர் உயிரிழந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில், 2,231 விபத்துக்கள் காரணமாக 2,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், 2,403 விபத்துக்கள் காரணமாக 2,521 பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில், 2,597 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகி, 2,746 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களைக் குறைப்பது அனைத்து வீதிப் பயனர்களாலும் பகிரப்படும் ஒரு தேசியப் பொறுப்பாக மாற வேண்டும் என்று துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பாதசாரிகள், ஓட்டுநர்கள், பயணிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பொறுப்புடன் செயல்படவும் தவிர்க்கக்கூடிய துயரங்களைத் தடுக்கவும் கடமைப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாகனங்களை மற்றவர்களிடம் ஒப்படைப்பவர்களும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தல்துவ-அமிதிரிகல வீதியின் மெதகொட பகுதியில் நேற்று மாலை (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அமிதிரிகலவிலிருந்து தல்துவ நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் இருந்தவர் மற்றும் காரில் இருந்த மூன்று பயணிகள் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் மூவர் பின்னர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று (13) இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னும் எந்த சூழ்நிலையும் கண்டறியப்படாத நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு பயணிகளும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர்.

இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, ​​வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! appeared first on Oruvan.com.

வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை
எதிர்காலத்தில், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதிர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் தான் என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை போக்குவரத்து சட்டத்திற்கு கூடுதலாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கையாள பொலிஸ்மா அதிபர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.

குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும்.

அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது.

ஆகவே, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்” என்றார்.

The post வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை appeared first on Oruvan.com.