5 பந்தில் 5 விக்கெட் Archives - Oruvan.com

5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர்
அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பர் 44 ஓட்டங்களையும், பீட்டர் மூர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை எடுத்திருந்தது. 12ஆவது ஓவரை கர்டிஸ் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் appeared first on Oruvan.com.