2025 Archives - Oruvan.com

அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்
ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

“கடந்த 76 ஆண்டுகளாக, இலங்கை ஊழல், மோசடி மற்றும் திறமையின்மையின் கீழ் இயங்கி, நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சரியான திசையில் இட்டுச் செல்வதைத் தடுத்தது.

இதனால், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், மீண்டெழுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். 5 வீத பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறையில் சுமார் 10 வீத வளர்ச்சியையும் எட்டுவது சாதகமான நிலை.

பணவீக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதும், வணிகச் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்” என்றார்.

The post அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது.

அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.

கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம்.

அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி, புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது.

விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது.

இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.

தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

The post ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி appeared first on Oruvan.com.

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு
2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது.

2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு வரவேற்கப்பட்டது.

The post புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு appeared first on Oruvan.com.

2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை

181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை தாமதமாகத் தொடங்குவதால்,

அரசப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நடைபெறும் நாட்களை 181 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை ஆண்டு தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், நான்கு மட்டுமே வார இறுதி நாட்களில் உள்ளது.

ஏனைய அனைத்து விடுமுறை நாட்களும் வார நாட்களில் அமைந்துள்ளது.

இதனால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post 2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு appeared first on Oruvan.com.