ஹோமாகம Archives - Oruvan.com

ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) குறித்த பல்கலைக்கழகத்தினால் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாலை 6.00 மணியளவில் அந்த விழா நிறைவடைந்துள்ளது.

அதன் பின்னர், மாணவர்கள் குழுவொன்று அந்த ஹோட்டலில் தனியாக விருந்துபசாரம் (Party) ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இந்த விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் மோதலாக மாறியதிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணம் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களின்படி, விருந்துபசாரத்தின் போது மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது, மாணவர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அந்த மாணவியின் நண்பரான (கொலை செய்யப்பட்ட மாணவர்), மாணவியைப் பின்தொடர்ந்து சென்ற மாணவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவரின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த மாணவர் ஹோட்டல் ஊழியர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் appeared first on Oruvan.com.

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் ஒன்றரை வயதுடைய மகளும் மனைவியும் காரில் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சம்ருதி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவி அதிகாரியாக பணியாற்றியவர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப்பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.