ஹிருணிகா Archives - Oruvan.com

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றியதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர்.

மேலதிக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

The post ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

ஹிருணிகாவை மேயர் வேட்பாளராக களமிறக்க சஜித் திட்டம்?
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குத் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக ஹிருணிகாவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

கடும் இழுபறிக்கு மத்தியில் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தீர்வு கண்டுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணி சிதையாத வகையில் பங்காளிக் கட்சிகளுக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில், பங்காளிக் கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய மூன்று ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஷாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஆ.மொஹமட் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹிருணிகாவை மேயர் வேட்பாளராக களமிறக்க சஜித் திட்டம்? appeared first on Oruvan.com.