ஹார்முஸ் ஜலசந்தி Archives - Oruvan.com

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்
ஹார்முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று சவுதி அரேபியா வலி​யுறுத்தி வரு​கிறது.

கடந்த 11ஆம் திகதி அமெரிக்​கா, ஈரான் இடையே நடை​பெற்ற அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புறத்​தி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் முடக்​கியது. ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் எந்​தவொரு கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முடி​யாது என்று அமெரிக்கா எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதற்கு பதிலடி​யாக வளை​குடா நாடு​களின் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஈரான் ராணுவம் அனு​மதி வழங்க மறுத்து வரு​கிறது.

அமெரிக்​கா, ஈரானின் ராணுவ நடவடிக்​கைகளால் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முழு​மை​யாக முடங்​கி​யிருக்​கிறது.

ஈரான் துறை​முகங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் வளை​குடா நாடு​களின் அனைத்து துறை​முகங்​கள் மீதும் தாக்​குதல் நடத்​து​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக சவுதி அரேபிய அரசு ​கூறிய​தாவது:

பெர்​சிய வளை​குடா மற்​றும் செங்​கடலுக்கு நடுவே சவுதி அரேபியா அமைந்​துள்​ளது. தற்​போது பெர்​சிய வளை​கு​டா​வின் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டிருப்​ப​தால் செங்​கடல் வழி​யாக சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை சவுதி அரேபியா மேற்​கொண்டு வரு​கிறது.

ஏமன் நாட்​டின் ஹவுத்தி கிளர்ச்​சிப் படை ஈரானின் பினாமி​யாக செயல்​படு​கிறது. தற்​போதைய சூழலில் ஈரானின் தூண்​டு​தலால் ஹவுத்தி கிளர்ச்​சிப் படை செங்​கடலில் அமைந்​துள்ள பாப் அல் மண்​டேப் ஜலசந்​தியை மூடும் அபா​யம் உள்​ளது. அவ்வாறு மூடப்​பட்​டால் சவுதி அரேபி​யா​வின் கடல் வழி போக்​கு​வரத்து முழு​மை​யாக முடங்​கும். உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்கு பற்​றாக்​குறை ஏற்​படும்.

மேலும் உரங்​களுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உணவு தானிய உற்​பத்தி பாதிக்​கப்​படும். வளை​குடா நாடு​களின் ஏற்​றும​தி, இறக்​குமதி மிக​வும் மோசமடை​யும். எனவே ஹார்​முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்த தகவலை உறுதி செய்​யும் வகை​யில் அமெரிக்​கா​வின் வால் ஸ்டீரிட்​ ஜர்​னல்​ நாளிதழில்​ விரி​வான செய்​தி வெளி​யாகி உள்​ளது.

The post ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல் appeared first on Oruvan.com.