ஹர்த்தால் Archives - Oruvan.com

மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல்
வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றைய தினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ள போதும் மக்களின் இயல்பு நிலை வழமை போல் காணப்படுகிறது.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம்(18) வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றைய தினம் (17) ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் மன்னாரில் பஜார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்பும் இன்றி வழமை போல் காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

The post மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல் appeared first on Oruvan.com.

வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

நகரத்தில் அநேக வர்த்தகநிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளது.

இதேவேளை ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்த மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இயங்கியிருந்தது.

The post வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு appeared first on Oruvan.com.

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது.

இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம் appeared first on Oruvan.com.

பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்
எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போர் முடிவுற்று 16 வருடங்கள் கடந்த போதும் வடகிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. அவர்களின் பிரச்சன்னமும் குறைக்கப்படவில்லை.

மாறாக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்தஅவர்கள் அங்கு நிலையான இராணுவ கட்டுமானங்களை அமைத்தனர்.

அந்தகாலம் தொட்டு தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தின் தலையீடனாது பல்வேறு பாதிப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான ஒரு சம்பவமே கடந்தவாரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டு பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

தமிழர்தாயக பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவேண்டிய நிலைமையை ஆட்சிக்குவந்த பேரினவாத அரசுகள் சிறிதளவேனும் செய்யவில்லை.

தொடர்ச்சியாக அதிகார வர்க்கமானது தமிழ்மக்களை அடிமை மனோநிலையில் நடாத்துகின்ற இந்த நிலைக்கு வடகிழக்கு மக்கள் தமது பூரண எதிர்ப்பை காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் தமிழர்தாயக பகுதிகளில் இடம்பெறும் அதிகாரவர்க்கத்தின் எதேச்சியதிகாரப்போக்கிற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை(18) அனுஸ்டிக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு வடகிழக்கு தமிழ்மக்கள், தங்களது பூரண ஒத்துழைப்பை நல்கி சர்வதேச சமூகத்திற்கும்,அரசுக்கும் எமது நிலைப்பாட்டை உறுதிபடவெளிப்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் உள்ளது.

The post பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள் appeared first on Oruvan.com.

ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுட்டிப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடக்க இருப்பதால் அந்தத் திகதியை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நேற்று மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்த மாற்றம் சம்பந்தமாக நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கள் கிழமை 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் அனுட்டிப்பை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு வடகிழக்கு முழுவதையும் முடக்கி எமது எதிர்ப்பை பாரிய அளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

The post ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.