ஹரிணி Archives - Oruvan.com

ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலைமையை பயன்படுத்தி, ஜே.வி.பி. கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பாராளுமன்ற சபைத் தலைவரான பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் விஜயம் செய்துவிட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

இதனடிப்படையில், அவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிவதற்குப் பின்னணியாக சீனாவின் ஆதரவும் இருக்கலாம் என ஜே.வி.பியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

என்றாலும், தரம் ஆறுக்கான கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

The post ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா? appeared first on Oruvan.com.

எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் – ஹரிணி
“எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பல கட்சி முறைமை மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என எதிரணி தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எங்கு, எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எதிரணி விளக்கினால் நல்ல.

தராதரம் பராது சட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துவதற்கு பெயர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்பதா” எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

பல கட்சி ஆட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாம். எதிரணியில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைவதுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, பல கட்சி முறைமையை எதிரணிதான் நாசமாக்கியுள்ளது. தமது கட்சியை பாதுகாத்து அதனை வலுப்படுத்துவதற்கு எதிரணிகளால் முடியாமல்போயுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க ஆளுங்கட்சியை குறைகூறுவது ஏற்புடையது அல்ல. நாம் எதிரணியை குறிவைக்கவில்லை. அதற்கு நேரமும் கிடையாது. ஏனெனில் மக்களுக்கான சேவையே எமக்கு முக்கியம்.” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

The post எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் – ஹரிணி appeared first on Oruvan.com.