ஹமாஸ் Archives - Oruvan.com

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இஸ்​ரேல் ராணும் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​துள்ளது. அந்த உடல்​கள் இஸ்​ரேலுக்கு அனுப்​பி வைக்​கப்பட உள்ளன.

கடந்த ஒக்​டோபர் 10-ம் திகதி அமெரிக்க மத்​தி​யஸ்​தத்​தின் முயற்​சி​யாக போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அதன் சமீபத்​திய முன்​னேற்​ற​மாக இது நடந்​துள்​ளது. முன்​ன​தாக 21 பிணைக்​கை​தி​களின் உடல்​களை போர் நிறுத்த விதி​முறை​களின் கீழ் இஸ்​ரேலிடம் ஹமாஸ் ஒப்​படைத்​தது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

போர் நிறுத்த ஒப்​பந்த மீறல்​கள் இருந்​த​போ​தி​லும் 15 பாலஸ்​தீனர்​களின் உடல்​களை இஸ்​ரேல் அனுப்​பிய​தாக காசா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். கடந்த மாதம் போர் நிறுத்​தத்​திலிருந்து இஸ்​ரேலிய காவலில் வைக்​கப்​பட்​டிருந்த 285 உடல்​களை சர்​வ​தேச செஞ்​சிலுவை சங்​கம் காசா​விற்கு கொண்டு சென்​றுள்​ளது. இருப்​பினும், டிஎன்ஏ சோதனை கருவி​கள் இல்​லாத​தால் உடல்​களை அடை​யாளம் காணுவது சிக்​கலாகி உள்​ளது என காசா சுகா​தார அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

The post பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் appeared first on Oruvan.com.

காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொருபுறம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் படைகளால் மீட்கப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் முன்னதாக ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதிமீறல் என்று நெதன்யாகு கண்டனம் தெரிவித்திருந்தார்.

நெதன்யாகுவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

The post காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு appeared first on Oruvan.com.

அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

கடந்த 13-ம் திகதி எகிப்​தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்​றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் இந்த அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

எனினும் போர் நிறுத்தம் தொடங்கியபிறகும் ஹமாஸ் – இஸ்ரேல் படைகளுக்கு இடையே காசாவில் தொடர் மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால், நாங்கள் உள்ளே சென்று சரி செய்ய வேண்டி இருக்கும். அது மிக விரைவாகவும் மிகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே சென்றுவிடுவார்கள்.என்னால் அவர்களிடம், ‘உள்ளே போய் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது, ​​நாங்கள் அதைச் சொல்லவில்லை. நாங்கள் ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர்.

The post அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி
காசாவில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது.

இதையடுத்து காசா​வில் 10-ம் திகதி போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது.

எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, ஹமாஸ் குழு​வின் பிடி​யில் இருந்த 20 இஸ்​ரேலிய பிணைக் கைதி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டனர். அதே​போல் இஸ்​ரேல் சிறை​களில் அடைக்​கப்​பட்​டிருந்த 154 பாலஸ்​தீனர்​களும் விடுவிக்​கப்​பட்​டனர்.

பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நாட்​டைச் சேர்ந்த அவி​நாட்​டன் ஓர் என்​பவரும் விடுவிக்​கப்​பட்​டார். இவர் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிடித்து வைத்​திருந்த 20 இஸ்​ரேலியர்​களில் ஒரு​வர் ஆவார்.

சுமார் 738 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்த இவர் நேற்று முன்​தினம் வீடு வந்து சேர்ந்​தார். அவரைப் பார்த்​ததும் அவரது மனைவி நோவா அர்​காமனி ஓடி வந்து கட்​டியணைத்​துக் கொண்​டார். கணவரை முத்​தமிட்டு வரவேற்​றார். சந்​தோஷத்​தில் அவர் வாய்​விட்டு அழு​தார்.

மனை​வியைப் பார்த்​ததும் கண்​ணீர் விட்டு அழு​தார் அவி​நாட்​டன் ஓர். அவி​நாட்​டனின் மனைவி நோவா அர்​காமனி​யும், பிணைக் கைதி​யாக பிடித்து வைக்​கப்​பட்​டிருந்​தார். இஸ்​ரேல் ராணுவத்​தினர் கடந்த ஆண்டு மேற்​கொண்ட முயற்​சி​யால் அவர் விடுவிக்​கப்​பட்​டார். 2 ஆண்​டு​களுக்​கும் மேலான பிரிவுக்​குப் பின்​னர் தம்​ப​தி​யர் ஒன்று சேர்ந்​ததற்கு நண்​பர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

இரு​வரும் கட்​டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்​படங்​கள் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.

The post 738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி appeared first on Oruvan.com.

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் – உயிரிழந்தோரின் சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவிப்பு
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த பதிலடியில் 65000 இற்கும் அதிகமானா பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசா உருக்குலைந்து கிடக்கிறது. போர் சாவுடன் பட்டினிச் சாவும் தலைவிரித்தாடத் தொடங்கியது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புகள் ஏற்றுக் கொண்டன. அதன்படி, போர் நிறுத்தமும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடங்கியுள்ளது.

இதுவரை ஹமாஸ் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள நூறுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க உள்ளது.

ஐ.நா வரவேற்பு: இதனை வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “காசாவில் இருந்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை நான் வெகுவாக வரவேற்கிறேன். அவர்கள் விடுதையானதையும், தத்தம் அன்புக்குரியவர்களுடன் இணையப் போவதையும் நான் வரவேற்கிறேன். மிகுந்த துன்பத்தை அனுபவித்துவிட்டு அவர்கள் திரும்புகிறார்கள். அதேபோல், உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் வலியுறுத்துகிறேன். இந்தப் போரை நிறுத்துவதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், அடுத்த நகர்வுகளை வேகமெடுக்கச் செய்ய வேண்டும். ஐ.நா., காசா துயரத்தை, அதன் மக்களின் பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர உறுதுணையாக இருக்கும்.” என்றார்.

காசா உச்சி மாநாடு: இதற்கிடையில் காசா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட 20 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் காசாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

The post அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் – உயிரிழந்தோரின் சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவிப்பு appeared first on Oruvan.com.

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

ட்ரம்பின் போர் நிறுத்தத்தை ஹமாஸ் தரப்பு நிராகரிப்பு
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான வாயில் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு ட்ரம்ப் பரிந்துரைத்திருக்கும் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதோடு நேற்று (02) காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 43 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ட்ரம்பின் பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இடையே இடம்பெற்ற நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கை எட்டப்பட்டதாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் இறுதி முன்மொழிவு ஒன்று ஹமாஸிடம் கையளிப்பதற்கு எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களிடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறி வரும் ஹமாஸ் அமைப்பு இந்த போர் நிறுத்த திட்டத்தை ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தீவிரமாகவும் தயாராகவும் இருப்பதாக ஹமாஸ் அதிகாரியான தஹிர் அல் நுனு ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ‘போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வழிவகுக்கும் எந்த முயற்சியையும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த போர் நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக எகிப்து அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒருசில தினங்களாக காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்து வரும் ட்ரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இணங்கும்படி ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி இருந்தார். இந்த 60 நாள் காலப்பகுதி போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

மறுபுறம் காசாவில் தொடரும் தாக்குதல்கள் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் தற்காலிக போர் நிறுத்தமே ஆறுதலை தரும் என்று அங்குள்ள மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். ‘இரண்டு மாதங்களாக இருந்தாலும் கூட அது இந்த முறை நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். அது ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை காக்க உதவும்’ என்று காசா நகர குடியிருப்பாளரான கமால் என்பவர் தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசாவில நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 250 பலஸ்தீனர்கள் பலியாகி இருப்பதாக காசா மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதில் கணிசமானவர்கள் உதவிக்காக காத்திருந்த நிலையில் கொல்லப்பட்டவர்களாவர். இதில் கான் யூனிஸ் நகரின் அல் மவாசி பகுதியில் அடைக்கலம் பெற்ற மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய செல் குண்டு தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அதே பகுதியில் கூடாரங்கள் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசா நகரின், ஜபால் வீதியில் இருந்த வீட்டின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் தந்தை அஹமது ஐயாத் சினோ, மனைவி அயாத், அவர்களின் இரு மகள்களான சாரா மற்றும் ஒபைதா ஆகிய சினோ குடும்பத்தின் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வீடும் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் அங்குள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மர்வான் அல் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா நகரில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசா தொடர்பில் தகவல்களை பெறுவதில் மர்வான் அல் சுல்தான் முக்கிய மூலமாக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 56,647 ஆக அதிகரித்திருப்பதோடு 134,105 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

The post ட்ரம்பின் போர் நிறுத்தத்தை ஹமாஸ் தரப்பு நிராகரிப்பு appeared first on Oruvan.com.

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்
அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், நரகத்தின் வாயில்கள் திறக்கும்.

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை வான், கடல் மற்றும் நிலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முழு தீவிரத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்.

பணயக்கைதிகள் திரும்பும் வரை மற்றும் தெற்கு குடியிருப்பாளர்களுக்கு உள்ள அனைத்து அச்சுறுத்தல்களும் அகற்றப்படும் வரை நாங்கள் சண்டையை நிறுத்த மாட்டோம்.” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம் appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், ஈரான் இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவையும் மிரட்ட முயற்சித்துள்ளதாகவும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் அல்லது காசா நரகமாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

ஜனவரி 19 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, இன்று காலை, இஸ்ரேல் காசா மீது அதன் மிகவும் தீவிரமான தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

ஜபாலியா, காசா நகரம், நுசைரத், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட காசா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கு வரை பல்வேறு பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காசா மக்களுக்கு எதிரான சியோனிச அழிப்புப் போரை மீண்டும் தொடங்குவதை எதிர்க்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், உலகின் சுதந்திர மக்களையும் ஹமாஸ் கேட்டுக் கொண்டது.

மீண்டும் போருக்குத் திரும்பும் நெதன்யாகுவின் முடிவு, போர்க் கைதிகளைப் பலியிட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை மூலம் அடைய முடியாததை, எதிரி போர் மற்றும் அழிவு மூலம் அடைய முடியாது என்றும் ஹமாஸ் கூறியது.

The post அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு appeared first on Oruvan.com.