ஹட்டன் Archives - Oruvan.com

ஹட்டன் பேக்கரியின் வெட்டு பாணில் மனித தோல்
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தயாரிக்கப்பட்ட வெட்டு பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (25) இரவு உணவிற்காக ரூ.180 இற்கு வெட்டு பாண் வாங்கிய வாடிக்கையாளர், அதை உண்ண முயன்றபோது ஒரு துண்டில் விரல் காயத் தோல் இருப்பதை கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பாணையும், அந்த காயத் தோல் துண்டையும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பேக்கரி உரிமையாளர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பலமுறை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய சம்பவத்தை அடுத்து பேக்கரி உரிமையாளருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஹட்டன் பேக்கரியின் வெட்டு பாணில் மனித தோல் appeared first on Oruvan.com.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து, ஒருவரிடம் இருந்து 12 தொடக்கம் 15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதில் 12 பேர் துபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது appeared first on Oruvan.com.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஹட்டன் ஸ்ரீகிஷ்னபவான் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாடு காலை 9.30 தொடக்கம் மாலை 7 மணி வரை நடைபெற்றது. பாட்டாளி வர்க்க மக்கள் அனைவரும் இம் மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர்.

மாநாட்டு உரையை பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் நிகழ்த்தினார்.

மாநாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் பெண் தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மலையக கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய சிவனு அண்ணாசாமி, தொழிற்சங்க துறையில் 60 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய பதுளை ஆறுமுகம் முத்துலிங்கம் மாற்று அரசியல் சிந்தனை உள்ளிட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வரும் சிவனு இராஜேந்திரன், இலக்கியம் ஊடாக மலையக மாற்றத்துக்கான கருத்துக்களை உருவாக்கி வரும் சு.தவச்செல்வன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இம் மாநாட்டின் மூலம் மலையகத்தில் மாற்று அரசியல் சிந்தனை மேலும் வளர்ச்சியடையும் என ஈரோஸ் ஜனநாயக தேசிய முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

The post ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு appeared first on Oruvan.com.

ஹட்டன் பேருந்து விபத்து – புதுப்பித்த தகவல்
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் காயமடைந்த 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சாரதி ஹட்டன் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றதாகவும், அதனாலேயே சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களை விட சில ஆசனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், விபத்துக்குள்ளான பேருந்தின் பாதுகாப்பு கெமராவின் காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த தரவுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான பேருந்து (21) இரவு ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய சிறுவன் சிறுநீரக நோயாளர் என்பதுடன், மாதாந்த சிகிச்சை பெறுவதற்காக தனது சகோதரியுடன் கண்டிக்கு சென்றிருந்த போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரியும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அட்டன் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான செயலமர்வு அண்மையில் அட்டன் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.

ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் மேற்பார்வையில் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தலைமையில் அதிகாரிகள் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

The post ஹட்டன் பேருந்து விபத்து – புதுப்பித்த தகவல் appeared first on Oruvan.com.