ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன Archives - Oruvan.com

நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது
நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று, எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு அநீதிக்கு உள்ளாகலாம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது. சட்டத்தைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்ட மிகச்சிறந்த வரையறை ‘ஆசைகளின் ஆதிக்கமற்ற பகுத்தறிவு’ என்பதாகும். ஆனால், தற்போது சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியிருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலம் தம்மிடமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்திள் உள்ளடக்கங்கள் மிகவும் பாரதூரமானவை மற்றும் சர்ச்சைக்குரியவையாகும். அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய ரங்க திஸாநாயக்க தன்மை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை ஒரு அரசியல் கட்சி தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காகச் செய்யும் ஒன்றாகக் கருதாமல், பரந்த சட்ட ரீதியான சமூக நீதிக்கான ஒரு விடயமாகப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் இதுபோன்ற ஒரு விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு அநீதிக்கு உள்ளாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

The post நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது appeared first on Oruvan.com.

நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்
“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில், “அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும்.

ஒரு குழு, திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கும், பொறுப்பான அமைச்சருக்கும் உள்ளது.

வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, பொலிஸுக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

அரசாங்கத்தில் சிலர் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்? என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன் appeared first on Oruvan.com.

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடியாணை உத்தரவு தற்போதைய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை.

எங்களிடம் உள்ள தகவல்களின் படி இந்த சிவப்பு பிடியாணை உத்தரவு கடந்த அரசாங்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக, சிவப்பு லேபிள்களுடன் கூடிய 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகும்.

கோவில் தொற்று காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் போது கூட ஆய்வு செய்யப்பட்டாமல் எந்தவொரு கொள்கலன்ளும் விடுவிக்கப்படவில்லை.

இப்போது சுங்கத்தில் ஒரு போலியான நெருக்கடி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியுடன் சிவப்பு லேபிள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

323 உடன் கூடுதலாக, சிவப்பு லேபிள்களுடன் இதேபோன்ற ஏராளமான கொள்கலன்கள் அந்தக் காலகட்டத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் இலங்கைக்குள் கொண்டு வர முடியாத ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

மேலும், இந்த கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை, இந்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் நியாயமான முறையில் விசாரணை செய்து பதில் வழங்குவார் என நம்புகின்றோம்.

இதேவேளை, சமீபத்திய நாட்களில், ஒரு நாளைக்கு நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒவ்வொன்றையும் பாதாள உலகத்திற்குள் போதைப்பொருள் கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளாக அரசாங்கம் விளக்குவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு
தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கூறியவை வருமாறு,

” நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, நாம் கூட்டு எதிரணியாக செயற்படுவோம். முதலில் ஒன்றிணைவோம். அதன்பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகப்போகின்றது. ஆனால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடிதமொன்றை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதி இல்லை. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியவில்லை.

பதவியைவிட தாய்நாடுதான் முக்கியம் என்பதை உணர்ந்து அரசாங்க ஊழியர்களும், படை அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.” – என்றார்.

The post பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு appeared first on Oruvan.com.

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

” பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையில் மாற்றம் வரவுள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன. இப்படியான தகவல்கள் இலங்கைபோன்ற நாடுகளுக்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஏனெனில் அரசியல் ஸ்தீரதமற்ற தன்மை நிலவும் நாடொன்றுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிய முதலீடுகளை செய்ய முன்வரமாட்டார்கள்.

எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, வராதா என்பதையும், அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதையும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது விடயத்தில் தாமதம் நிலவக்கூடாது. அறிவிப்பை வெளியிட்டால்தான் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்படும்.” – என்றார்.

The post பிரதமர் பதவியில் மாற்றம் வருமா? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும் appeared first on Oruvan.com.

அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கையீனம் – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

“இந்த அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கும், செய்கின்ற செயலுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

தங்களது பாரம்பரியக் கட்சிகளையெல்லாம் விட்டுவிட்டுதான் இந்த அரசுக்கு வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு வழங்கினார்கள். ஆனால், தற்போது அரசு மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

2015ஆம் ஆண்டு பின்னடைவைச் சந்தித்து 2018ஆம் ஆண்டில் மீண்டெழுந்தது போல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டெழும். அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்.” – என்றார்.

The post அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கையீனம் – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு appeared first on Oruvan.com.

சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்த பலர் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போதுள்ள வேட்புமனுக்களின் கீழ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு சதித்திட்டத்தின் மூலம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்தன.

அப்போது ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். ரணிலின் வேலைத்திட்டத்தையே இந்த அரசாங்கம் நடத்துகின்றது.

ஒரு அமைச்சர் அல்லது அரசியல் தொடர்புள்ள ஒருவர் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் செலவழிப்பதாக கூறப்படுவதுடன், இதுவரை ஜனாதிபதி நிதியத்தினால் உதவி செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.

இதன்படி, ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். எங்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்படவில்லை.

அதிலிருந்து நாங்கள் பணத்தை எடுப்பதும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச appeared first on Oruvan.com.

“சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

கட்சி உறுப்பினர் பதவிக்கு கூடுதலாக, சர்வஜன பலயவின் தலைமைத்துவக் குழுவிற்கும் சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசேன பணியாற்றினார். இந்த காலப்பகுதியில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்திருந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ய

The post “சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன appeared first on Oruvan.com.