ஸெலென்ஸ்கி Archives - Oruvan.com

வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் புதின் உறுதியளித்தாா். ஆனால் அந்த வாக்குறுதிக்குப் பிறகும் உக்ரைன் மீது 150 ட்ரோன்களை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் உக்ரைன் எரிசக்தி மையங்களும் குறிவைக்கப்பட்டன.” என்றாா் ஸெலென்ஸ்கி.

ரஷியா மறுப்பு: உக்ரைன் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தாங்கள் நிறுத்திவிட்டதாகவும், அந்த நாடுதான் தங்களின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் எரிசக்தி மையங்களை நாங்கள் தாக்காமல் உள்ளோம். ஆனால் பதிலுக்கு அதே நிலைப்பாட்டை உக்ரைன் இதுவரை கடைப்பிடிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு படையெடுத்து. கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனை வலியுறுத்தி வருகிறாா்.இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்தது.

எனினும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய ஜனாதிபதி விளாதிமீா் புதின் விமா்சித்தாா். அதைத் தொடா்ந்து, போா் நிறுத்தம் தொடா்பாக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் தொலைபேசியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எரிசக்தி மையங்களில் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதற்கான ஒப்பந்தத்தை உக்ரைனுடன் மேற்கொள்வதாக புதின் உறுதியளித்தாா்.இந்த நிலையில், புதினின் வாக்குறுதிக்கு எதிராக தங்கள் எரிசக்தி மையங்களில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக ஸெலன்ஸ்கி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளாா்.

The post வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

இந்தோ பசிபிக் பிரந்தியம் – உக்ரைனை போல் தைவானை கைவிடுவாரா டிரம்ப்?
இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா கைவிடுவது சாத்தியமில்லை என்று தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார்.

தேசிய நலன் தொடர்பாக அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பவற்றில் இந்தோ பசிபிக் வட்டாரமும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்மையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு அமெரிக்கா நிதி, ஆயுத உதவிகளைப் பேரளவில் வழங்கியது.

ஆனால் தற்போது டிரம்ப்,  ஸெலென்ஸ்கி இடையிலான உறவு கசந்துள்ளது.

இந்நிலையில், தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. தன்னை ஒரு தனி நாடாக அடையாளப்படுத்திக்கொள்ளும் தைவான் சீனாவின் நிலைப்பாட்டை ஏற்க மறுக்கிறது.

பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தைவானுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தற்போது டிரம்ப்பின் ஆதரவு கிடைக்குமா என்ற கவலை மேலோங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (மார்ச் 4) பேசிய வெலிங்டன் கூ , இந்தோ பசிபிக் வட்டாரம், தைவான் நீரிணை, தென்சீனக் கடல் ஆகிய இடங்களில் அமைதியை நிலைநாட்டுவது அமெரிக்காவுக்குப் பலனைத் தரும் என தெரிவித்துள்ளார்.

எனவே, தைவானின் விவகாரத்தில் அமெரிக்கா கண்டும் காணாமலும் இருந்துவிட முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்தோ பசிபிக் வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவினால் அது அமெரிக்காவுக்கு பொருளியல், புவிசார் அரசியல் ரீதியாகப் பலனளிக்கும் என்றும்  கூ தெரிவித்துள்ளார்.

தைவானை ஆதரித்து அதற்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தோ பசிபிக் பிரந்தியம் – உக்ரைனை போல் தைவானை கைவிடுவாரா டிரம்ப்? appeared first on Oruvan.com.