ஷெபாஸ் ஷெரீப் Archives - Oruvan.com

இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது – சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாதவரை அந்த நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தற்போது இந்த விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்றுள்ளது. தஜிகிஸ்தான் தலைநகர துஷான்பேயில் நடந்து வரும் சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்து பேசியுள்ளார்.

‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக்கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ எனக்கூறியுள்ளார்.

The post இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது – சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் appeared first on Oruvan.com.

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்துவிட்டது : ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.

ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா முயன்றால், நமது நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாமும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நாங்கள் காட்டுவோம்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி எங்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கும். இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 7-ம் திகதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் திகதி முதல் 10-ம் திகதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் திகதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில்தான் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அதே நேரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாவது நபருக்கு இடமில்லை என இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

The post இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்துவிட்டது : ஷெபாஸ் ஷெரீப் appeared first on Oruvan.com.