ஷுபன்ஷு சுக்லா Archives - Oruvan.com

விண்வெளி ஆய்வு நிறைவு – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபன்ஷு சுக்லா
சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது. அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்​கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு விண்கலம் கடலில் பாது​காப்​பாக இறக்​கப்​பட்டது.

டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழுவினர் 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்டனர். இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​.

முன்னதாக, அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​ மாணவிகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் திகதி இஸ்ரோ விஞ்​ஞானிகளு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்​கள் தங்​கி​யிருந்​தார். அப்​போது அவர் சுமார் 60 வகை​யான ஆய்​வு​களை செய்​தார். குறிப்​பாக நெல், காராமணி, எள், கத்​தரி, தக்​காளி உள்​ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். அந்த விதைகளை அவர் விண்​வெளி​யில் சிறப்பு பெட்​டிகளில் வைத்து முளைக்​கச் செய்​தார். இந்த ஆராய்ச்​சி​யில் இஸ்​ரோ, கேரள வேளாண் பல்​கலைக்​கழகம், ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகிய​வை​யும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

பாசி பன்​றிக்​குட்டி என்ற நுண் உயி​ரியை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதை வெறும் கண்​ணால் பார்க்க முடி​யாது. நுண்​நோக்கி உதவி​யுடன் மட்​டுமே பார்க்க முடி​யும். இந்த நுண் உயிரி விண்​வெளி​யில் எவ்​வாறு வளர்​கிறது என்​பது குறித்​தும் சுக்லா ஆய்வு செய்​தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இந்த பாசி வகைகள் எவ்​வாறு வளர்​கின்றன என்​பது குறித்து அவர் ஆய்வு நடத்​தி​னார்.

மைக்​ரோஅல்கா என்ற பாசி வகை​யை​யும் சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதன் வளர்ச்சி குறித்​தும் அவர் செய்​தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்ஸிஜனை உற்​பத்தி செய்ய முடி​யும். இது எதிர்​கால விண்​வெளி பயணத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும். இவை உட்பட ஒட்​டுமொத்​த​மாக 60 வகை​யான ஆராய்ச்​சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளி​யில் மேற்​கொண்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விண்வெளி ஆய்வு நிறைவு – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபன்ஷு சுக்லா appeared first on Oruvan.com.

வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்
இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார் ஷுபன்ஷு சுக்லா.

புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

நாசாவின் நேரடி வீடியோ இணைப்பு, டிராகன் விண்கலமானது விண்வெளி நிலையத்தை நெருங்குவதைக் காட்டியது மற்றும் டாக்கிங் (docking) பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது. டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

ஷுபன்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களில் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷுபன்ஷு சுக்லா. கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார். 2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு இவர் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.

ஷுபன்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளி மையம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலம், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று மதியம் 12.01 மணிக்கு அனுப்பப்பட்டது. இவர்களது பயணம் இந்த மாதத்தில் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு போன்ற காரணங்களால் 3 முறை ஒத்திபோடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி பயணத்துக்கு முன் சுக்லா அளித்த பேட்டியில், ‘‘நான் விண்வெளிக்கு ஆய்வு உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை கொண்டு செல்கிறேன்’’ என்றார்.

60 ஆய்வுகள்: சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள இந்தக் குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.

41 ஆண்டுகளுக்குப் பின்: விண்வெளி பயணம் மேற்காண்ட முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் ஷுபன்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராகேஷ் சர்மாவின் நினைவாக ஒரு பொருளையும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதை விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பியபின் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

The post வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம் appeared first on Oruvan.com.